நேற்றைய தினம் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தராஜன் டெல்லியில் சந்தித்துள்ளார். மரியாதை நிமித்தமான சந்திப்பு என அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி சென்றுள்ள தெலுங்கானா கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 15 நிமிடம் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது தான் பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் 3 ஆண்டு செயல்பாடுகள் குறித்த புத்தகத்தையும் அமித்ஷாவிடம் வழங்கினார். மேலும் இது வழக்கமான சந்திப்பு என்று கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.
தெலுங்கானா மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கான ஆட்சேர்ப்பு மற்றும் பல்கலைக்கழகங்களில் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதை கருத்தில் கொண்டு ஆட்சேர்ப்பு வாரியம் குறித்த மசோதா உருவாக்கப்பட்டது. இதற்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சில ஆட்சேபனைகள் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மசோதாக்கள் இன்னும் கவர்னர் ஒப்புதலைப் பெறவில்லை.
வாரியத்தின் ஆட்சேர்ப்பு ஏற்கத்தக்கதா என்பதை பல்கலைக்கழக யுஜிசியிடம் கேட்டறிந்தார். பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பதாம் பலமுறை அறிவுறுத்தியும் அரசு செவிசாய்க்கவில்லை என அவர் வேதனை தெரிவித்தார்.
இந்த நிலையில் மத்திய மந்திரி அமித்ஷாவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து பேசியது தெலுங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்த சந்திப்பு வழக்கமான சந்திப்பு தான் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் பூபேந்திர படேலே மீண்டும் முதலமைச்சராக நீடிப்பார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார். பூபேந்திர படேல் இதற்கு முன்பு அகமதாபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் (AUDA) தலைவராக பணியாற்றியுள்ளார். அவர் இதுவரை அமைச்சர் பதவி எதுவும் வகித்ததில்லை. இந்நிலையில், குஜராத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும் என ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2 கட்டத் தேர்தல்
182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று (நவ.03) அறிவித்தது. 89 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக டிசம்பர் 1ஆம் தேதியும், 93 தொகுதிகளுக்கு இரண்டாவது கட்டமாக டிசம்பர் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறும்.
குஜராத் மாநிலத்தில் 1998ஆம் ஆண்டு முதல் 24 ஆண்டுகளாக பாஜக ஆட்சிக்கட்டிலில் இருந்து வருகிறது. முன்னதாக பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி, குஜராத்திலும் வரும் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
நேற்று (நவ.03) தேர்தலில் போட்டியிடும் 10 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டது. பாஜகவும் தேர்தலுக்கான வேட்பாளர்களை இறுதி செய்து வருகிறது. குஜராத் தேர்தல் குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் கட்சி விரைவில் கூட்டத்தை கூட்டவுள்ளது.
பாஜக - காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இம்முறை குஜராத் தேர்தல் களம் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.