புதிய நியாய விலை கடை திறப்பு விழா
 
காஞ்சிபுரம்  (Kanchipuram News): காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து காஞ்சிபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட கீழ்கதிர்பூர், மேல்கதிதிர்பூர், மேல்ஒட்டிவாக்கம் போன்ற பல்வேறு பகுதிகளில் புதிய நியாய விலை கடை, புதிய அங்கன்வாடி மையம், புதிய தார் சாலை அமைத்தல், பள்ளிகளுக்கு சுகாதார நிலையம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் திறப்பு கடந்த மாதம் 30 ஆம் தேதி நடைபெற்றது.



 

ஒருமையில் விமர்சித்தார்
 
அப்பொழுது கீழ்கதீர்பூர் பகுதியில் வசித்து வரும் கிராம மக்கள் மற்றும் 100 நாள் வேலை பணியாற்றும் கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி சட்டமன்ற உறுப்பினர் எழிலரசனை முற்றுகையிட்டு எனக்கு ஏன் மகளிர் உரிமை தொகை திட்டம் மாதம் ரூ.1000 கிடைக்கவில்லை? என தொடர்ந்து ஒருவர்பின் ஒருவராக தெரிவித்து சில நேரத்தில் அனைவரும் ஒன்று கூடி அனைவருக்கும் கிடைக்கவில்லை என கூச்சலிட்டனர். இதனையடுத்து அவர்கள் மத்தியில் பேசிய காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர், பிரதமர் மோடி 15 லட்சம் ரூபாய் போடுவதாக கூறினார்.

 

பாஜகவினர் 150-க்கும் மேற்பட்டோர் கைது
 
இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் பல்வேறு ஊடகங்களிலும் வைரலாக பரவிய நிலையில், நேற்று முன்தினம் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாஜகவினர் புகார் மனு அளித்திருந்தனர். இந்தநிலையில், பொதுமக்களிடம் சட்டமன்ற உறுப்பினர் பிரதமர் மோடியை இழிவாக பேசியதாக, அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் வீட்டை முற்றுகையிட முயன்ற காஞ்சிபுரம் மாவட்ட பாஜகவினர் 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பாஜகவினர் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

 

பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

 

கைது செய்யும்போது பாஜகவினர் நாடகம் நடத்துவதாக டிஎஸ்பி ஜூலியஸ் சீசர் கூறியது பாஜக மகளிர் அணியினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது, இது குறித்து பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் கைது செய்யப்பட்டவர் இரவு 10:45 வரை அடக்கி வைத்துள்ளதாக பாஜகவினர் மீண்டும் குற்றச்சாட்டு தெரிவித்து நிலையில் அங்கு செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களையும் உள்ளே அனுமதிக்காமல் காவல்துறை தவிர்த்தனர்.



 

அதன்பின் அனைவரையும் விடுவித்த நிலையில் பாஜக மகளிர் அணி காஞ்சிபுரம் காவல் கோட்ட கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசரின் செய்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து பாஜகவினரின் நாடகம் நடத்துவதாக கூறிய வார்த்தைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தும் பெண்ணென்று பாராமல் இரவு வரை தங்க வைத்து அதன் பின் விடுதலை அளித்தது பெரும் கண்டனத்துக்கு உரியது என தெரிவித்தனர். பெண்களுக்கு பாதுகாப்பு எனக் கூறிவிட்டு இரவு 11 மணிக்கு விடுவித்தால் எவ்வகையில் வீடு செல்வது என்பதும் குறித்தும் கேள்வி எழுப்பினர்.


 

காவல்துறையினர் வழக்கு பதிவு




நள்ளிரவில் பாஜகவினர் விடுவிக்கப்பட்டனர். இந்த போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திய  மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு சங்கர் ருத்ரகுமார் ஸ்ரீதர் வாசன் வெங்கடேசன் பாஸ்கர் ஆகிய ஏழு பேர் மீது  ஆறு பிரிவின் கீழ் காஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஏழு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்





 அண்ணாமலை  கண்டனம்

 




இந்தநிலையில், இது தொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்