Bihar Elections 2025: பீகார் சட்டமன்ற பொதுத்தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 121 தொகுதிகளில் 3.75 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

Continues below advertisement

பீகார் சட்டமன்ற தேர்தல்:

நடப்பாண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பீகார் சட்டமன்ற பொதுத்தேர்தலில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  மொத்தமுள்ள 243  தொகுதிகளில் முதற் கட்டமாக இன்று மாநிலத்தில் உள்ள 18 மாவட்டங்களில் 121 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் பாஜக - நிதிஷ்குமார் அடங்கிய என்டிஏ கூட்டணிக்கும், காங்கிரஸ் - தேஜஸ்வி யாதவ் அடங்கிய எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. 20 ஆண்டுகளாக நீடித்து வரும் நிதிஷ்குமாரின் ஆட்சி முடிவுக்கு வருமா? தேஜஸ்வி யாதவ் முதலமைச்சராக பீகார் வரலாற்றில் இடம்பெறுவாரா? என்பதை இந்த தேர்தல் நிர்ணயிக்க உள்ளது.

Continues below advertisement

18 மாவட்டங்கள்..3.75 கோடி வாக்காளர்கள்:

முதற்கட்ட வாக்குப்பதிவில் தலைநகர் பாட்னா (14), போஜ்பூர் (7), பக்சர் (4), கோபால்கஞ்ச் (6), சிவன் (8), சரண் (10), முசாஃபரோபூர் (11), வைஷாலி (8), தர்பங்கா (10), சமஸ்திபூர் (10), மாதேபுரா (4), சஹர்சாரா (4), மகிரியா (3), மகிரியா (4), மகரியா (72), ஷேக்புரா (2), நாளந்தா (7), பெகவுராய் (7) உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கும்.

மொத்தம் 3.75 கோடி வாக்காளர்கள் 1,314 வேட்பாளர்களின் விதியை தீர்மானிக்க உள்ளனர். இதில் இந்திய கூட்டணியின் முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் மற்றும் பாஜகவின் துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி போன்ற நட்சட்திர வேட்பாளர்களும் அடங்குவர். ரகோபூர் தொகுதியில் ஹாட்ரிக் வெற்றி பெற இலக்கு வைத்துள்ள தேஜஸ்வி, பாஜகவின் சதீஷ் குமாரை எதிர்கொள்கிறார். சதீஷ் குமார் 2010 ஆம் ஆண்டு தேஜஸ்வியின் தாயார் ரப்ரி தேவியை ஜே.டி.(யு) சார்பில் போட்டியிட்டு தோற்கடித்தவர் ஆவார். இந்த சட்டமன்றத் தேர்தலில் முதன்முதலில் களமிறங்கும் பிரசாந்த் கிஷோரின் ஜன் ஸ்வராஜ் கவனத்தை ஈர்த்துள்ளது. 

பீகார் தேர்தல் - முக்கிய தகவல்கள்

  • வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை தொடரும், இருப்பினும் பாதுகாப்பு காரணங்களுக்காக சில பகுதிகளில் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும்.
  • திருத்தப்பட்ட நேரம் சிம்ரி பக்தியார்பூர், மகிஷி, தாராபூர், முங்கர், ஜமால்பூர் மற்றும் சூர்யாகர்ஹா சட்டமன்றப் பிரிவில் உள்ள 56 வாக்குச் சாவடிகளுக்கு பொருந்தும்.
  •  கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள போரே தொகுதியில் ஜான் சூரஜ் சார்பில் போட்டியிடும் ஒரு திருநங்கை உட்பட மொத்தமாக, 122 பெண் வேட்பாளர்களும் தேர்தல் களத்தில் உள்ளனர்
  • தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள், ஜேடியு 57 இடங்களிலும், பாஜக 48 இடங்களிலும், எல்ஜேபி (ராம் விலாஸ்) 14 இடங்களிலும், ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 2 இடங்களிலும் போட்டியிடுகின்றன
  • எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் முதல் கட்டத்தில் ஆர்ஜேடி 73 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து காங்கிரஸிலிருந்து 24 வேட்பாளர்களையும், சிபிஐ (எம்எல்) இலிருந்து 14 வேட்பாளர்களையும் நிறுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக வரும் 11ம் தேதி  அன்று 122 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் எதிர்க்கட்சிகளின் முகமாக திகழும் முதலமைச்சர் நிதிஷ்குமார் போட்டியிடும் தொகுதியும் அடங்கும். அதன் பிறகு நவம்பர் 14ம் தேதி மொத்த வாக்குகளும் எண்ணப்பட்டு, பீகார் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.