பீகாரில் உள்ள 243 சட்டமன்ற தொகுதிகளுக்கு, இரண்டு கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தபால் வாக்குகளை தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும்பணியும் தொடங்கியுள்ளது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கின்றது.
பாஜக கூட்டணி முன்னிலை
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக கூட்டணி 161 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக தனியாக 69 இடங்களிலும், ஜே.டி.யு 76 இடங்களிலும், எல்.ஜெ.பி., 12 இடங்களிலும், இதர கட்சி 4 இடங்களிலும் மொத்தம் 161 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
காங்கிரசின் இண்டியா கூட்டணி மொத்தம் 78 இடங்களில் முன்னிலை வகுத்து வருகிறது. இதில் ஆர்.ஜே.டி 59 இடங்களிலும், காங்கிரஸ் 15 இடங்களிலும், இடதுசாரிகள் 3 இடங்களிலும், எதிர கட்சிகள் 1 இடத்திலும் முன்னிலை வகித்து வருகின்றன.
பிரசாந்த் கிஷோரின் ஜென்சுராஜ் கட்சி 2 இடங்களிலும், பிற கட்சிகள் இரண்டு இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
பல தொகுதிகளில் கடும் போட்டி
பெரும்பான்மைக்கு தேவையான 122 தொகுதிகளை காட்டிலும், கூடுதலான இடங்களில் அந்த கூட்டணி முன்னிலை வகிக்கிறது. தேர்தல் பிந்திய கருத்துக்கணிப்பிலும் இதே நிலை தொடரில் இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வந்தாலும், பல தொகுதிகளில் கடும் போட்டி நிலவி வருவது தெரிய வருகிறது. நொடிக்கு நொடி, தொடர்ந்து ஒவ்வொரு தொகுதிகளிலும் முன்னணி நிலவரங்கள் மாறி வருகிறது குறிப்பிடப்பட்டது.