பீகார் தயாராக உள்ளது - இந்த முறை முழு பலத்துடன் மீண்டும் ஒரு NDA அரசாங்கம் என்று சிராக் பஸ்வான் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்
தொகுதி பங்கீடு:
இது குறித்த அறிவிப்பை மத்திய அமைச்சரும் பீகார் பாஜக தேர்தல் பொறுப்பாளருமான தர்மேந்திர பிரதான், இந்த தேர்தலுக்காக நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தொகுதிப் பங்கீட்டு சூத்திரத்தை அறிவித்தார், இதன் மூலம் பாரதிய ஜனதா கட்சி (BJP) மற்றும் ஜனதா தளம் (United) இரண்டும் தலா 101 இடங்களில் போட்டியிடும் என்பதை உறுதிப்படுத்தினார்.
இது குறித்து தனது டிவிட்டரில் பதிவிட்டார் "நாங்கள் NDA கூட்டணிக் கட்சிகளிடையே ஒரு நல்ல சூழ்நிலையில் இருக்கை பங்கீட்டை முடித்துள்ளோம். BJP - 101, JD(U) - 101, LJP (R) - 29, RLM - 06, HAM - 06. NDA கூட்டணிக் கட்சிகளின் அனைத்து தொழிலாளர்களும் தலைவர்களும் இதை முழு மனதுடன் வரவேற்கிறார்கள். பீகார் தயாராக உள்ளது, NDA அரசாங்கம் மீண்டும் ஒருமுறை ஆட்சி அமைக்கும்" என்று பதிவிட்டார்
சிராக் பஸ்வான் சொன்னது என்ன?
"நாங்கள், NDA குடும்பம், 2025 பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான இருக்கை பகிர்வு ஏற்பாட்டை ஒரு நல்ல சூழ்நிலையில் முடித்துள்ளோம். பீகார் தயாராக உள்ளது - இந்த முறை முழு பலத்துடன் மீண்டும் ஒரு NDA அரசாங்கம்." என்று சிராக் பாஸ்வான் கூறினார்.
மீண்டும் நிதிஷ் ஆட்சி:
வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று ஐக்கிய ஜனதா தளம் செயல் தலைவர் சஞ்சய் குமார் ஜா நம்பிக்கை தெரிவித்தார்.
பீகாரில் நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும், நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.