மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் பேசிய தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை ஒருவர் கூட மதம் மாறக்கூடாது. மதம் மாறியவர்கள் மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்று பேசியுள்ளார். 

இந்துக்கள் மதம் மாறக்கூடாது:

இந்த மாநாட்டில் பேசிய அண்ணாமலை சென்ற 10 ஆண்டுகளில் உலகில் கிறிஸ்தவர்களின் மக்கள்தொகை 12 கோடி அதிகரித்துள்ளது. இஸ்லாமியர்களின் மக்கள் தொகை 35 கோடி உயர்ந்துள்ளது. இப்படியே சென்றால், 2055 ஆம் ஆண்டு நிறைவில், இந்த உலகம் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் உலகமாக மாறும். நம்முடைய கலாச்சார சின்னங்களை யாரும் அழிக்கக் கூடாது. ஒருவர் கூட மதம் மாறக்கூடாது. மதம் மாறியவர்கள் மீட்டுக் கொண்டுவர வேண்டும். 

இந்துக்கள் வாக்கு மட்டும் வேண்டுமா?

 இந்துக்களிம் வாழ்வியல் முறையை தொந்தரவு செய்து பஹல்காமில் தாக்குதல் நடத்தப்பட்டது. எனது வாழ்வியல் முறைக்கு பிரச்னை வந்தால் எழுந்து நிற்பேன். அடிப்பேன். இந்து என்பதற்காக நமது கடைகோடி தொண்டர்கள் கொல்லப்படுகிறார்கள்.

மொழி, ஆன்மீகம், இலக்கியம் சேர்ந்தது தமிழ். மொழியும், ஆன்மீகமும், இலக்கியமும் ஒன்றாக இருக்கும் பெருமை தமிழுக்கு உண்டு; கந்த சஷ்டி கவசத்தில் அறிவியல், விஞ்ஞானம் உள்ளது 5,400 ஆண்டுகள் பழமையானவன் தமிழன்; அந்த பழமையோடு வாழ விடுவார்களா?; செல்பி கேட்டால் ஒரு அரசியல் தலைவர் திருநீறை அழிக்கிறார் என்று விசிக தலைவர் திருமாவை அண்ணாமலை மறைமுகமாக தாக்கி பேசியிருந்தார். 

முருகன் வட இந்தியாவில் இருக்கிறார்:

முருகனை வட இந்தியாவில் யாருக்கும் தெரியாது என்று தமிழக | அரசியல்வாதிகள் கூறுகிறார்கள். வட இந்தியாவில் இருக்கும் 18 மஹா புராணங்களில் மொத்தம் 95,000 ஸ்லோகங்கள் உள்ளன. ஆனால், ஒரே ஒரு ஸ்கந்த புராணத்தில் மட்டும் 1 லட்சம் ஸ்லோகங்கள் இருக்கின்றன என்றார்.

தமிழக அரசியல் இப்படித்தான் இருக்கும்:

திருப்பதி கோவிலுக்கு ₹2.47 லட்சம் கோடி சொத்து இருக்கிறது. ஆனால், தமிழகத்தின் மொத்த பட்ஜெட்டே ₹3 லட்சம் கோடி தான். ஆன்மிகம் சார்ந்த அரசியல், வாழ்வியல் நெறி, பொருளாதாரம் வரும்போது மட்டும்தான் நாமும், நம் கலாச்சாரமும் நிம்மதியாக |இருப்போம். இனி தமிழக அரசியல் மதுரை முருகன் மாநாட்டுக்கு முன்பு, பின்பு என்றே இருக்கும் என்றார். 

சூரசம்ஹாரம் செய்வோம்!

இந்து மத வாழ்வியல் முறையில் தலையிடாதே, முருகனின் முதல் வீடான திருப்பரங்குன்றத்துக்கே பிரச்சனை ஏற்படுத்தினீர்கள் என்றால் ஒவ்வொரு வீடாக சென்று சூரசம்ஹாரம் செய்துவிட்டு மீண்டும் அமைதியாக திருத்தணிக்கு சென்று விடுவோம்இதுதான் முருக பக்தர்கள் மாநாட்டின் மூலம் கூறப்படும் என்று தெரிவித்தார் அண்ணாமலை.