தமிழக பா.ஜ.க. பொதுச்செயலாளராகிய கே.டி.ராகவனின் ஆபாச வீடியோ வெளியாகி அந்த கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த வீடியோவை வெளியிட்ட யூ டியூபர் அண்ணாமலையின் சம்மதத்துடனே இந்த வீடியோவை வெளியிட்டதாக இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார். இதுதொடர்பாக, தனது பேஸ்புக் பக்கத்தில் அண்ணாமலையுடன் தான் பேசுவது போன்று ஆடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த ஆடியோவில் அண்ணாமலை பேசியிருப்பதாவது, “ நான் ஒரு வாய்ப்பை உங்களுக்கு உருவாக்கித் தருகிறேன். பெரும்பாலும் டெல்லியில் ஏற்பாடு செய்து தருகிறேன். நீங்கள் இதை அங்கே காட்ட வேண்டும். முக்கியமானவர்களிடம் இதைக் காட்ட வேண்டும். இதுபோன்ற மிக மோசமான நபகர்கள் நீக்கப்பட வேண்டும் என்பதை புரிய வைப்போம்.
நாடு, கட்சி, தனிநபர்கள் போன்றவற்றை காப்பாற்ற வேண்டும் என்ற பரந்த நோக்கத்திற்காக இதைச் செய்ய வேண்டும். கட்சியைக்கூட விடுங்கள். உங்களுக்கு பா.ஜ.க. பிடிக்காமல் இருககலாம். ஆனால், நாடு மிக முக்கியம். இந்த வீடியோக்களை வைத்து பரபரப்பை ஏற்படுத்தினால், உங்கள் பிராண்ட் நிற்கும்.
ஆனால், 15 மிகப்பெரிய எதிரிகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். ஏனென்றால், இவற்றை வெளியிடுவதன் மூலம் ஒரு மனிதனின் அரசியல் வாழ்வையே அறுத்து எறிகிறோம். 30-40 ஆண்டுகளாக அவர்கள் உருவாக்கிய அரசியல் வாழ்க்கையை அறுத்து எறிகிறோம். அவர்கள் எதிரிகளாகி விடுவார்கள். அப்படி செய்தால் அதில் உடனடியாக நீதி கிடைக்கும். எறும்பு புற்றில் மருந்தடிப்பதைப் போல. ஆனால், உங்களுக்கும் இதில் சங்கடம் வரக்கூடாது என நினைத்தால், ஆறு மாதம் காத்திருக்கலாம்.
இந்த வீடியோக்களை வெளியிட்டால் எனக்கு வேலை போய்விடும் என்று கண்டிப்பாக உங்களை வேலையை விட்டு தூக்கமாட்டார்கள். நானே சந்தித்து பேசினேன். எதுவும் கமலாலயத்தில் நடக்கவில்லையா? தலைவர்கள் தப்பு செய்யவில்லையா? என்ற கேட்டார்கள். அதை நான் சொல்லமுடியாது. அது என் வேலையில்லை என்றேன்.
நான் தலைவனான பிறகு கட்சித் தலைவர் அறையின் கதவை கண்ணாடி கதவாக மாற்றிவிட்டேன். இந்த அறைக்குள் என்னென்னவோ நடக்கிறது. இப்போது உள்ளே நுழையும் யாரும் தலைவரைப் பார்க்கலாம். நான் என் அறைக்கு எந்த பெண்ணையும் தனியாக நுழைய அனுமதிப்பதில்லை. குஷ்பு உள்பட யாராக இருந்தாலும் சரி. ஒரு சிறிய புரட்சியை செய்துள்ளேன்.
நீங்கள் கொஞ்சம் பாதுகாப்பாக இருங்கள். அவர்கள் ஈவு இரக்கமின்றி இருப்பார்கள். ரொம்ப எக்ஸ்போஸ் ஆகிவிடாதீர்கள். எனக்கு தமிழ்நாட்டில் யாரும் ஆர்டர் போட முடியாது. அதை அமித்ஷா தெளிவுபடுத்திவிட்டார். நான் தலைவராக இருக்கும்போது ஏதும் நடக்காது.
தமிழ்நாட்டில் யாரும் செய்யாததை செய்திருக்கிறீர்கள். நீங்கள் மாவட்ட செயலாளரானால் உங்களுக்கு கீழே பத்து பேர் இருப்பான். 2026-ல் எம்.எல்.ஏ.வாக நிற்பீர்கள். ஆனால், நாளை காலையே ஏதும் நடந்துவிடாது. 5 வருடத் திட்டமாக இது இருக்க வேண்டும். மாநில அளவில் பொறுப்புக் கொடுத்து விடுகிறேன். இலக்கியப் பிரிவு என்ற ஒன்றை உருவாக்கிவிடலாம். என்ன செய்ய வேண்டுமென சொல்லுங்கள். செய்யலாம். இதைவிட வேறு என்ன சொல்ல முடியும்.
பிரசாத்தின் விலகல் கடிதம் என் டேபிளிலில் இருக்கிறது. எப்போதோ அவரை தூக்கியாவிட்டது. என்னைப் பற்றி தமிழிசை மேடத்திடம் தப்பாக சொல்லி, கீழே விழுந்து கால் உடைந்து மருத்துவமனையில் படுத்திருக்கிறார். நீண்ட காலத்திற்கு முன்பே ராஜினாமா வாங்கிவிட்டேன். இவ்வாறு அந்த ஆடியோவில் அண்ணாமலை பேசுவது போல உள்ளது. இந்த ஆடியோ குறித்து விரைவில் விளக்கம் அளிக்க உள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.