”அய்யாவ (ராமதாஸ்) வச்சுகிட்டு டிராமா பண்ணிட்டு இருக்கானுக.. கோவத்துல இருக்கேன் அய்யாவுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுனா தொலைச்சு போட்டுருவேன்” என்று ஆவேசமாக பேசியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.
தொலச்சு போட்டுருவேன்:
பாட்டளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (அக்டோபர் 10) சென்னையை அடுத்த உத்தண்டி பகுதியில் நடைபெற்றது. இதில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “அய்யாவுக்கு எதாவது ஒன்னு ஆச்சுனா தொலச்சு போட்டுருவேன். சும்மா இருக்க மாட்டேன்.
வேடிக்கை பாத்துட்டு இருப்பேனு நெனச்சுட்டு இருக்கானுங்க..சரியான கோவத்துல இருக்கேன் நானு. அய்யாவ வச்சு ட்ராமா பண்ணிட்டு நாடகம் நடத்திட்டு இருக்கானுக. நம்மளோட மருத்துவர் அய்யா நல்லா இருக்காரு. மருத்துவமனைக்கு பரிசோதனைக்குத் தான் போயிருக்காரு. அது ஏற்கனவே திட்டமிட்ட ஒரு பரிசோதனை தான்.
அய்யாவ தூங்க கூட விடமாட்றாங்க:
மாதத்திற்கு ஒரு முறை செய்யும் பரிசோதனை தான். பரிசோதனையெல்லாம் முடிந்து விட்டது அவர் இப்போது நன்றாக இருக்கிறார். அதை வைத்துக்கொண்டு சிலர் சில மாதிரி பேசுகிறார்கள். சிலர் எனக்கு போன் பண்ணி வந்து அய்யாவ பாருங்க என்று சொல்கிறார்கள். சிலர் அசிங்கமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். அய்யாவுக்கு இன்பெக்ஷன் ஆக கூடாதுனு இருக்கோம். யார் யாரோ உள்ள போய்டு பாத்துட்டு இருக்காங்க.
இது என்ன கண்கட்சியா? அய்யாவின் பாதுகாப்பு உயிர் முக்கியம். அய்யாவ தூங்க கூட விடமாட்றாங்க”என்று ஆவேசமாக பேசியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.
முன்னதாக கடந்த சில மாதங்களாகவே பாமகவில் பல்வேறு பிரச்சனைகள் நடைபெற்று வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு பக்கமும், அன்புமணி ஒரு பக்கமுமாக செயல்பட்டு வருகின்றனர். அதேபோல் இரு தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வரும் சூழலில் அன்புமணி, ராமதாஸுக்கு எதாவது ஒன்னு ஆச்சுனா தொலச்சு போட்டுருவேன் என்று பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.