மருத்துவர் ராமதாசுக்கு ஏதாவது ஆகினால், ஏதாவது ஆனால் உடன் இருப்பவர்களை நான் சும்மா விட மாட்டேன், தொலைச்சிடுவேன் என அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.

Continues below advertisement


பாமக ஆலோசனைக் கூட்டம்


பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆகிய இருவருக்கிடையே, மோதல் போக்கு காரணமாக கட்சி இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம், சென்னை பனையூரில் நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் பாமகவின் இளைஞர் அணி தலைவராக, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் குமார் நியமிக்கப்பட்டார். மேலும் இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி, வளர்ச்சி பணிகள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து ஆலோசனை நடைபெற்றது. 


மருத்துவர் ராமதாசை காட்சி பொருள் ஆக்கிவிட்டார்கள்


இதனை தொடர்ந்து நிர்வாகிகள் மத்தியில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், மருத்துவர் ராமதாஸ் நலமுடன் உள்ளார். ஒரு வாரத்திற்கு முன்பே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கப்பட்டு, இந்த ஆன்சியோ பரிசோதனை நடைபெற்றது. ஆனால் அவருடன் இருப்பவர்கள் அவரை காட்சி பொருள் போல அனைவருக்கும் போன் செய்து வரவைத்து, அவரை ஓய்வெடுக்க விடாமல் தொல்லைசெய்து கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.


தொடர்ந்து தொந்தரவு செய்கிறார்கள்


தொடர்ந்து போன் செய்வது உள்ளிட்ட பல்வேறு தொந்தரவுகளை செய்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் உடன் இருக்கும்போது மருத்துவர் ராமதாஸ் அறை மிகவும் பாதுகாப்பாக இருக்கும். யாரையும் அருகில் நெருங்க விட மாட்டோம் ஆனால் இப்போது யார் யாரையோ வரவழைத்து, திட்டமிட்டு பார்க்க வைத்து கொண்டிருக்கிறார்கள் என குற்றச்சாட்டை முன் வைத்தார். 


மேலும், பாமக நிர்வாகிகள் மத்தியில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், டாக்டர் ராமதாஸ் என்ன எக்சிபிஷனா ?. அவரை பார்ப்பதற்கு வாருங்கள் என்று போன் போட்டு அனைவரையும் வரவழைக்கிறார்கள். டாக்டர் ராமதாசுக்கு ஏதாவது ஆனால் உடன் இருப்பவர்களை நான் சும்மா விட மாட்டேன், தொலைச்சிடுவேன். மருத்துவர் ராமதாசை வச்சுக்கிட்டு டிராமா பண்ணி நாடகம் பண்ணிட்டு இருக்காங்க என அன்புமணி ராமதாஸ் பேசினார்.