தமிழ்நாடு இறகு பந்து விளையாட்டு கழகம், டால்பின் விளையாட்டு அகாடமி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் இனைந்து தேசிய அளவில் இறகு பந்து போட்டி மேலக்கோட்டையூர் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் வளாகத்தில் நடத்தப்படுகிறது. இப்போட்டி, கடந்த 17 ம் தேதி முதல் 24 ம் தேதி வரை நடக்கிறது. 35 வயது முதல் 75 வயது வரை ஆண், பெண் இரு பிரிவினர் 1000 பேர் கலந்து கொள்கின்றனர். இன்று 35 முதல் 50  வயது பிரிவினர் போட்டியில் கலந்துக்கொண்டனர். இதில், தமிழ்நாடு இறகு பந்து விளையாட்டு கழக  தலைவரும், பாமக கட்சி தலைவருமான அன்புமணி ராமதாஸ் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கினார்.



 

அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு

 

இதனைத் தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திக்கையில், இந்தியாவில் விளையாட்டு என்றால் கிரிக்கெட்  இருந்து வந்தது .ஆனால் தற்போது தமிழகத்தில் அதற்கு இணையாக பேட்மிட்டன் போட்டி வளர்ந்து வருகிறது. சங்கர் முத்துசாமி என்ற வீரர் உலக அளவில் ஜூனியர் பிரிவில் முதலிடத்தில் உள்ளார். இது போன்ற பல வீரர்கள் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு தமிழ்நாடு இறகுப்பந்து சங்கம் சார்பில் உதவி வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் இறகு பந்து போட்டியில் ஊக்குவிக்க, கூடுதலாக இறகுபந்து விளையாடுவதற்காக, மாவட்டம்தோறும் உள்விளையாட்டு அரங்கம் கட்டப்பட வேண்டும். BWF டோர்னமெண்ட் தமிழகத்தில் நடைபெற வேண்டும். 



 

 

சொந்த கருத்து

 

ஆ.ராசா கூறியது, அவருடைய கருத்து, அவரவர் கருத்தை கூறுவதற்கு அவர் அவருக்கு உரிமை உண்டு. சமீபத்தில் தொடர் காய்ச்சல் தமிழகத்தில் உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி 2.0 நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. தமிழக மக்களும் 55 ஆண்டுகால ஆண்டுகளாக இரண்டு கட்சிகளின் அரசியலை பார்த்து வருகின்றனர். pmk 2.0 ,நீர் மேலாண்மை மற்றும் காலநிலை மாற்றம் குறித்து இருக்கும், காலநிலை மாற்றம் காரணமாக ஐரோப்பா , அமெரிக்கா ஆகிய நாடுகளில் வறட்சி ஏற்பட்டுள்ளது. புதிய ஏரிகள் மற்றும் நீர்தேக்கத்தில் உருவாக்க வேண்டும். தடுப்பணைகள் கட்டினால், மட்டுமே வருங்காலத்தில் நீர் பிரச்சினை நமக்கு வராது என அன்புமணி ராமதாஸ் பேசினார். 



 

2026 தேர்தலில்..

 

2026-ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் , பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் ஒருமித்த கருத்துக்களை உடைய கட்சிகள் சேர்ந்து, ஆட்சி அமைப்பது தான் எங்களுடைய இலக்கு. அதற்கு ஏற்ப யூகங்கள், 2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் அமைப்போம் . 

 

மாற்றம் வரும்..

 

நடை பயணம் என்றாலே மாற்றம் வரும். ராகுல் காந்தி இந்தியாவை ஒன்றிணைக்க வேண்டுமென நடைப்பயணம் மேற்கொள்கிறார், நிச்சயமாக ஓரளவிற்கு மாற்றம் வரும் ,மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படும். சமீபத்தில் நான் கூட தர்மபுரி மாவட்டத்தில் நடை பயணம் மேற்கொண்டேன் , அப்பொழுது பொதுமக்கள் ஏராளமான வரவேற்பு அளித்தனர் என தெரிவித்தார்.