விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே பட்டானூரில் பாமகவின் புத்தாண்டு சிறப்புப்பொதுக்குழு கூட்டம் இன்று கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியது, 2025ம் ஆண்டு நாம் அர்ப்பணிப்போடு பணியாற்றினால் 2026ம் தேர்தலில் வெற்றிபெறுவோம். நம்மிடம் மக்கள் பலம், இளைஞர் சக்தி, கட்சியின் கொள்கை, தலைமை உள்ளது.


ஆனால் நமக்கு தேர்தல் மூலமாக அங்கீகாரம் கிடைக்கவில்லை. இந்த ஆட்சியில் நிர்வாகம் இல்லை. இந்த ஆட்சியை விமர்சிக்க ஊடகத்திற்கு 2, 3 மாதங்களில் தைரியம் வந்துவிடும். முதற்கட்டமாக 120 தொகுதிகளை தேர்வு செய்து தேர்தல் பணியாற்ற உள்ளோம். அடுத்த கட்டமாக 114 தொகுதிகளில் பணியாற்ற உள்ளோம்.


37 முறை பலகட்ட போராட்டங்கள்..


தமிழகத்தில் நாம் சொல்வது பேசு பொருளாக மட்டும் இல்லாமல் கொள்கை முடிவை மாற்றி அமைக்கும் வகையில் அமைந்துள்ளது. 10.5 சதவீத இட ஒதுக்கீடே தவறானது. நாம் கேட்பது 20 சதவீதம். அதிகாரபூர்வமாக அன்று எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 14 சதவீதமாக இருந்தது. இந்த இட ஒதுக்கீடு பெற கடந்த ஆட்சியிலும், இந்த ஆட்சியிலும் 37 முறை பலகட்ட போராட்டங்கள் மற்றும் முதல்வரை சந்தித்து பேசியுள்ளோம். ஆனால் சிலர் தேர்தலுக்காக இட ஒதுக்கீடை கையில் எடுத்துள்ளதாக கூறுகிறார். இட ஒதுக்கீடு குறித்து முதல்வரிடம் பேசும்போது நிச்சயமாக செய்து கொடுக்கிறேன் என்று கூறுவார். 


நாம் 3 மடங்கு வேலை செய்ய‌ வேண்டும்


தனியாக கூட்டத்தொடர் நடத்திய முதல்வர் இந்த இட ஒதுக்கீடை கொடுப்போம் என்றார் . அதன் பின் என்ன நடந்தது என்று தெரியவில்லை. இதைப்பற்றி பேசினால் ராமதாஸூக்கு வேலை இல்லை என்று முதல்வர் கூறுகிறார். வேலை இல்லாமலா உங்களை துணை முதல்வராக்கினார்? வேலை இல்லாமலா கலைஞரை மெரினாவில் அடக்கம் செய்ய தொடுக்கப்பட்ட வழக்கை திரும்பப்பெற்றார். 


இதையும் படிங்க: PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!


நம் உரிமையை பெற நாம் 3 மடங்கு வேலை செய்ய வேண்டும். திருவண்ணாமலையில் நாம் நடத்திய உழவர் பேரியக்க மாநாடு போல இந்தியாவில் நடத்தவில்லை. இவை அனைத்தும் நாம் ஒரு மாதத்தில் நடத்தினோம். இதுதான் பாமக. இம்மாநாட்டில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடினர்.


கடந்த மக்களைத்தேர்தலில் நான் இன்னும் கொஞ்சம் கூடுதலாக வேலை செய்து இருக்கலாம். 2019ம் ஆண்டு நாம் எடுத்த தவறான முடிவால் மீண்டு வர முடியவில்லை. 2026ம் ஆண்டு கூட்டணி ஆட்சிதான். 


திருவண்ணாமலை மாநாடு ஒத்திகைதான்..


அக்கூட்டணியில் பாமக இருக்கும். 2026ல் நாம் ஆட்சியில் பங்கேற்க வேண்டுமென்றால் அரப்பணிப்புள்ள நிர்வாகிகள் கட்சியில் இருக்கவேண்டும். பேனரில் அய்யா படம் மட்டும் போடுங்கள் . என் படம் உட்பட யார் படமும் போடவேண்டாம். இதற்காக கட்சியில் குழப்பம் விளைவிக்க வேண்டாம். 2025ம் ஆண்டு இதெல்லாம் களையப்படும். திருவண்ணாமலை மாநாடு ஒத்திகைதான்.


தமிழகத்தில் 2026ல் கூட்டணி ஆட்சியை நாம் அமைப்போம். 1967ம் ஆண்டு காங்கிரஸூக்கு நடைபெற்றது, 2026ம் ஆண்டு திமுகவிற்கு நடைபெற உள்ளது. தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பை ராகுல்காந்தி தொடங்கிவைத்தார். இக்கணக்கெடுப்பை நடத்த மற்ற மாநிலங்களில் சட்டத்தில் இடமிருக்கு. ஏனெனில் ஸ்டாலின் ஜப்பானில் உள்ளார். இட ஒதுக்கீடு கொடுக்க மனமில்லை என்று சொல்லிவிடுங்கள். வருங்காலம் நம்முடைய காலம். இவ்வாறு அவர் பேசினார்.


இதையும் படிங்க:Anbumani: கூட்டணி என்றால் வாயை மூட வேண்டுமா ? திருமாவளவனுக்கு அன்புமணி சரமாரி கேள்வி..


ராமதாஸ்-அன்புமணி மோதல்:


தொடர்ந்து பேசிய ராமதாஸ் : பாமக இளைஞரணி தலைவராக முகுந்தனை அறிவித்தார். கட்சிக்கு புதிதாக வந்தவர்கள் எனக்கு உதவியாக இருக்க தேவையில்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். 


இதற்கு கோபமடைந்த ராமதாஸ் நான் தான் கட்சி நிறுவினேன் எனது அறிவிப்பை, யாராக இருந்தாலும் செயல்படுத்த வேண்டும் என அறிவித்தார். ஆனால் அன்புமணி ஏற்றுக் கொள்ளாத நிலையில் எனது உத்தரவை அறிவிப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கடுமையாக தெரிவித்தார். அப்படி எனது உத்தரவை மதிக்காமல் இருந்தால் யாராக இருந்தாலும் விலகிக் கொள்ளலாம் என மேடையிலேயே பேசியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.


முகுந்தனை மாநில இளைஞர் சங்க தலைவராக நியமிக்கப்படுகிறார். ராமதாஸ் நியமனம் செய்தார். இதற்கு கட்சிக்கு வந்து 4 மாதங்களே ஆன முகந்தனுக்கு பதிவியா என மேடையிலயே அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவிக்க. கோவம் அடைந்த ராமதாஸ் நான் சொல்பவர்கள் தான் கட்சியில் இருக் வேண்டும் இல்லை என்றால் கட்சியை விட்டு போங்க என ராமதாஸ் தெரிவிக்க. சென்னை பனையூரில் எனக்கு ஒரு அலுவலகம் வைத்துள்ளேன், அங்கே என்னை வந்து பார்த்துக்கலாம் என அன்புமணி ராமதாஸ் அறிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது.