தமிழக சட்டமன்றம் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ல் நடைபெறவிருக்கும் நிலையில் பரப்புரை செய்ய இறுதி நாளாக ஏப்ரல் 4 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இறுதிநாள் பிரசாரம் மாலை 5 மணியுடன் நிறைவடையும்.
ஆனால் இம்முறை கூடுதலாக 2 மணி நேரம் பிரசாரம் செய்யலாம் என தமிழக தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். சற்று நேரத்திற்கு முன் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‛ஏப்.4ம் தேதி இரவு 7 மணி வரை அரசியல் கட்சிகள் பிரசாரம் மேற்கொள்ள அனுமதிப்பதாக,’ தெரிவித்துள்ளார்.