அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் தற்போது வானகரத்தில் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் இன்று காலை முதல் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் தலைமை கழகம் சென்று அங்கு தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். அத்துடன் அங்கு எடப்பாடி மற்றும் ஒபிஎஸ் ஆதாரவாளர்கள் இடையே கடுமான மோதல் நடைபெற்று வந்தது.


 


இந்நிலையில் அதிமுகவின் தலைமை கழகத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்த அலுவலகத்திற்கு சீல் வைக்க வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அங்கு சிஆர்பிசி பிரிவு 145 அங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, “ஒரு இடத்திற்கு இருவர் உரிமை கோரும் போது அந்த நேரத்தில் அங்கு இருக்கும் அமைதிக்கும் கேடு விளைவிக்கும் சூழல் உருவாகும் போது அந்த இரண்டு தரப்பினரும் அந்த இடத்தைவிட்டு வெளியேற வேண்டும். அந்த இடத்திற்கு சீல் வைக்கப்படும். அந்த இடத்திற்கு பின்னர் வருவாய் கோட்டாட்சியர் வைக்கும் விசாரணையில் இரு தரப்பினரும் ஆஜராக தங்களுடைய தரப்பு வாதங்களை முன்வைத்த பிறகு இந்த இடத்திற்கான சீல் எடுக்கப்படும்” என்று சட்டம் தெரிவிக்கிறது.


 






முன்னதாக அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். மேலும் அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கு அடுத்த 4 மாதங்களில் தேர்தல் நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி நத்தம் விஸ்வநாதன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த பொருளாளர் பதவி தற்போது திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 


மேலும் அதிமுகவிற்கு ஓ.பன்னீர்செல்வம் துரோகம் செய்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார். மேலும் அவர் திமுகவிற்கு நெருக்கமாக உள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து எடப்பாடி பழனிசாமி தரப்பு நீக்கியுள்ளது. அத்துடன் அவருக்கு ஆதரவாக இருந்த 4 பேரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண