OPS Press Meet: மீண்டும் அதிமுகவில் சசிகலா...? நீதிமன்ற தீர்ப்புக்குப்பின் ஓபிஎஸ் சொன்ன சூசகம்!

யார் எல்லாம் கட்சியின் கொள்கைக்கு இசைந்து வருகிறார்களோ அவர்களை சேர்த்துக்கொள்வோம் என்ற ஓபிஎஸ் வார்த்தைகள் மூலம் சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

Continues below advertisement

ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கியது. அதில், அ.தி.மு.க.வில் ஜூன் 23-ந் தேதி இருந்த நிலையே நீடிக்கும் என்று அறிவித்துள்ளது. அ.தி.மு.க.வின் செயற்குழு கூட்டம், பொதுக்குழு கூட்டம் எதுவும் தனித்தனியாக நடத்தப்படக்கூடாது என்றும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் பொதுக்குழுவை கூட்ட ஒரு ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Continues below advertisement

மேலும், ஜூலை 11-ந் தேதி எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இதன்மூலம், கடந்த 11-ந் தேதி பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட அனைத்து முக்கிய முடிவுகளும் தானாகவே ரத்தாகிவிட்டது என்றது. 

இந்த நிலையில், இந்த தீர்ப்புக்கு பின் ஓபிஎஸ் மெரினாவில் உள்ள அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் சசிகலா குறித்து பேசினார்.

அதில், “ யார் எல்லாம் கட்சியின் கொள்கைக்கு இசைந்து வருகிறார்களோ அவர்களை சேர்த்துக்கொள்வோம். கட்சி தலைமை பதவியில் உள்ளவர்களுக்கு விமர்சனத்தை பொறுத்துக்கொள்ளும் சக்தி வேண்டும். அதிமுக என்பது ஒரே இயக்கம். அது தொண்டர்கள் இயக்கம். ஜுன் 23 ம் தேதி முன்னால் யார் யார் எந்த கட்சி பதவிகளில் இருந்தார்களோ அவர்கள் எல்லாம் அதே பதவியில் நீடிப்பார்கள்” என்றார்.

 யார் எல்லாம் கட்சியின் கொள்கைக்கு இசைந்து வருகிறார்களோ அவர்களை சேர்த்துக்கொள்வோம் என்ற ஓபிஎஸ் வார்த்தைகள் மூலம் சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

தீர்ப்பு : 

இந்த தீர்ப்பின் மூலம், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பதவிகள் தானாகவே ரத்தாகிவிட்டது. இதன்மூலம், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் எம்.பி. ரவீந்திரநாத் மற்றும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் நீக்கப்பட்டது அனைத்தும் தானாகவே செல்லாத நிலைக்கு வந்துவிட்டது.

தீர்ப்பின் முழு விவரம் இன்னும் வெளியாகாததால் பொதுக்குழுவை கூட்டுவது குறித்த முடிவு செய்வதற்கான சட்ட ஆணையரை யார் நியமிப்பது என்பது குறித்த விவரம் இதுவரை தெரியவில்லை. ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து ஆரவாரம் செய்து வருகின்றனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

Continues below advertisement