அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்ற வேண்டும் என இபிஎஸ் தரப்பு முறையிட்டு இருந்த நிலையில் தற்போது ஓபிஎஸ் தரப்பும் முறையீடு செய்துள்ளது. நீதிபதி என். சதீஸ்குமார் முன்பு வழக்கறிஞர் ராஜலட்சுமி ஆஜராகி வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மனுத்தாக்கல் நடைமுறை முடிந்தால் நாளை விசாரிப்பதாக நீதிபதி அனுமதி அளித்துள்ளது. வருவாய் கோட்டாட்சியர் உத்தரவை ரத்து செய்து, சீலை அகற்ற உத்தரவிடக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் முறையீடு செய்யப்பட்ட நிலையில் உண்மையான அதிமுக தாங்கள் தான் என்றும் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 






அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நேற்று காலை வானகரத்தில் நடைபெற்றது. இந்தச் சூழலில் நேற்று காலை ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் தலைமை கழகம் சென்று அங்கு தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். அத்துடன் அங்கு எடப்பாடி மற்றும் ஒபிஎஸ் ஆதாரவாளர்கள் இடையே கடுமான மோதல் நடைபெற்றது.


மேலும் படிக்க : Iravin Nizhal Review: படமா இது? அதுக்கும் மேல... உலக பார்வையில் விழும் இரவின் நிழல்!


அப்போது, அதிமுகவின் தலைமை கழகத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்த அலுவலகத்திற்கு சீல் வைக்க வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார். மேலும் அங்கு சிஆர்பிசி பிரிவு 145 அங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி, “ஒரு இடத்திற்கு இருவர் உரிமை கோரும் போது அந்த நேரத்தில் அங்கு இருக்கும் அமைதிக்கும் கேடு விளைவிக்கும் சூழல் உருவாகும் போது அந்த இரண்டு தரப்பினரும் அந்த இடத்தைவிட்டு வெளியேற வேண்டும். அந்த இடத்திற்கு சீல் வைக்கப்படும். அந்த இடத்திற்கு பின்னர் வருவாய் கோட்டாட்சியர் வைக்கும் விசாரணையில் இரு தரப்பினரும் ஆஜராக தங்களுடைய தரப்பு வாதங்களை முன்வைத்த பிறகு இந்த இடத்திற்கான சீல் எடுக்கப்படும்” என்று சட்டம் தெரிவிக்கிறது என்று தெரிவித்தனர். 


 



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண