சீல் வைக்கப்பட்ட அதிமுக தலைமை அலுவலகம் எம். ஜி.ஆர் உயில் படி தொண்டர்களுக்கு உரிமையானது என முன்னாள் அமைச்சர் கே.சி. பழனிசாமி தெரிவித்துள்ளார். அதனால் தொண்டர்கள் சார்பில், புதிய பொதுச் செயலாளர் 05.12.2016 அன்று அமலில் இருந்த கட்சி விதிப்படி, தேர்வு செய்யும் வரை தங்களிடம் ஒப்படைக்க கோரி கோட்டாட்சியர்க்கு மனு அனுப்பி உள்ளதாக கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சீல் வைப்பு:
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், ஜூலை 11ஆம் தேதி ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அதிமுக அலுவலகம் அருகே தொண்டர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இருதரப்பினரும் எதிர் எதிரே நின்றுக்கொண்டு கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது, கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனால், அந்த பகுதி போர்களம் போல காட்சியளித்தது. காவல்துறையினர் உள்ளிட்ட பலர் காயம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். மேலும், அலுவலகத்தின் மீது யாருக்கு உரிமை உள்ளது என்பது குறித்து ஜூலை 25ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்கும்படி, இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
தொண்டர்களிடம் ஒப்படையுங்கள்:
இந்நிலையில் சீல் வைக்கப்பட்ட அதிமுக தலைமை அலுவலகம் எம். ஜி.ஆர் உயில் படி தொண்டர்களுக்கு உரிமையானது என்றும், எனவே தொண்டர்கள் சார்பில், புதிய பொதுச் செயலாளர் தேர்வு செய்யும் வரை தங்களிடம் ஒப்படைக்க கோரி கோட்டாட்சியர்க்கு மனு அனுப்பி உள்ளதாக முன்னாள் அமைச்சர் கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Also Read: தமிழகத்தின் ராஜபக்சே இபிஎஸ்; விரைவில் தொண்டர்களால் விரட்டியடிக்கப்படுவார்- டிடிவி தினகரன்
Also Read: AIADMK issue : கே.பி.முனுசாமி ஒரு பச்சோந்தி; பொன்னையன் உயிருக்கு ஆபத்து: புகழேந்தி பரபரப்பு பேட்டி!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்