அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. கட்சியின் உள் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றே  பெரும்பாலானோர் எண்ணமாக இருக்கிறது எனவும் நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார். மேலும் கட்சி விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழுவை நடத்த வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்திருக்கிறார். 


இந்நிலையில் இந்தத் தீர்ப்பு தொடர்பாக ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் இன்பதுறை செய்தியாளர்களை சந்தித்தார். அதில், “அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற கூடாது என்று தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 2500க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்கு நீதிமன்றம் தலையிட முடியாது. ஒரு கட்சியின் உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட கூடாது என்பது எழுதப்பட்டாத விதி.  உச்சநீதிமன்றமும் அதைச் சுட்டிக் காட்டியுள்ளது.


இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் ஏதேனும் விதிமுறை மீறல்கள் இருந்தால் அவர் உயர்நீதிமன்றத்தை நாடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இன்று வானகரத்தில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்கு எந்தவித தடையும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார். 


முன்னதாக அதிமுகவின் பொதுக்குழுவிற்கு உரிய அனுமதி பெறாமல் நடைபெறுகிறது. ஆகவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இடம் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணை அனைத்தும் கடந்த வாரம் முடிவடைந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளியானது.


அதில் , “சட்டப்படி பொதுக்குழு கூட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி விட்டது. அதற்கு முரணாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது.  சட்ட விதிகளுக்குட்பட்டு நடத்த வில்லை என்றால் உச்சநீதிமன்றம் தான் அந்த உத்தரவின் பாதுகாவலர் என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தான் பரிசீலீக்க முடியுமே தவிர உயர் நீதிமன்றம் அல்ல.. பொதுக்குழு கூட்டத்தை கூட்ட கூடாது என்ற கோரிக்கையை தவிர வேறு எந்த இடைகால நிவாரணமும் ஓ.பி.எஸ் தரப்பில் கோரப்படவில்லை.


பொதுக்குழு கூட்டம் சட்டப்படி கூட்டப்பட மாட்டாது என்று ஓ.பி.எஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்காதது ஏன் என தெரியவில்லை. எனவே உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட அனுமதி வழங்க உயர் நீதிமன்றம் தயங்கவில்லை. 2665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2190 பேர் கேட்டுக்கொண்டதினங்க ஜூலை 11 பொதுக்குழு கூட்டம் நடத்தஜூன் 23 அறிவிக்கப்பட்டது. எனவே 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டதாகவே கருத முடியும். ஜனநாயகத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பம் தான் மேலோங்கி இருக்கும். பெரும்பான்மையனரின் விருப்பத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையை பெற முடியாதவர்கள் நீதிமன்றங்களை ஒரு கருவியாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண