மேலும் ஒரு வழக்கு:
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வரும் 23-ந் தேதி நடைபெற உள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி, பெருந்துறை ஒன்றிய அதிமுக மாணவர் அணி முன்னாள் பொருளாளர் சி.பாலகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு:
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் நியமனம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொதுக்குழு கூட்டம் ஜீன் 23 ஆம் தேதி நடைபெற உள்ளதை எதிர்த்து சி.பாலகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், பொதுக்கூட்டத்தில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களே அதிகம் உள்ளனர் என்றும், உட்கட்சி தேர்தலை நடத்த கோரியும் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பதிலளிக்க உத்தரவு:
இந்நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் உள்ளிட்டோர் நாளை மறுநாள் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓபிஎஸ் இபிஎஸ்-க்கு கடிதம்:
ஒற்றைத் தலைமை விவகாரம் சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து விவகாரம் குறித்து முடிவு எடுக்கப்படும் என தகவல் பரவுகிறது. இந்த சூழலில், ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் மோதல் வலுபெற்றுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இந்த கூட்டத்தை ஒத்திவைக்குமாறு இபிஎஸ்-க்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்