அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் வரும் ஜூன் 22ஆம் தேதி  முதல் ஜூன் 25ஆம் தேதி வரை சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ய மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து, ஈபிஎஸ் தரப்பில் ஆலோசனை நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி வீட்டில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் மற்றும் நிர்வாகிகள் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- திராவிட மாடல் என்பது மார்கெட்டிங் யுக்தி.. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சொன்னது என்ன?




இக்கூட்டத்தில் கட்சி பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்வது, பன்னீர் செல்வத்திற்கு அவைத்தலைவர் மற்றும் வழிகாட்டுதல் குழுத் தலைவர் பதவிகளை வழங்குவது குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. தற்போதுள்ள ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கவும், பொதுச்செயலாளரை தேர்வு செய்யவும், பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து ஆலோசித்து உள்ளனர்.


இந்த தகவலை ஓ.பன்னீர் செல்வத்திடம் தெரிவிக்கவும், அவர் ஏற்றாலும், ஏற்காவிட்டாலும் இந்த முடிவை அமல்படுத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக பழனிசாமி ஆதரவாளர்கள் தெரிவித்தனர். அதே நேரம்,  ’இது போன்ற முடிவை ஏற்பதில்லை; தற்போதைய நிலையே தொடர வேண்டும்’ என்பதில் பன்னீர் செல்வம் உறுதியாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இன்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் பன்னீர் செல்வத்தை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். எனவே இன்றும்  இரு தரப்பிலும் பேச்சு, ஆலோசனை தொடரும் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.


’’அமைதி காக்கணும்’’






அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் நேறு இரவு விடுத்த ட்விட்டர் பதிவில், தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண