அதிமுக உட்கட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பையும், தேர்தல் அலுவலர்கள் பற்றிய விபரங்களையும் அதிமுக ஒருங்கிணைப்பார் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் அறிவித்துள்ளனர். இதோ அவர்களின் அறிக்கை அப்படியே...






 


நகர வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி வட்டக் கழக நிர்வாகிகள் தேர்தல்களை நடத்துவதற்கான, மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்கள்; ஒன்றிய, பேரூராட்சி, நகரம் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளுக்கான தேர்தல் ஆணையாளர்கள் பட்டியல்:


முதல் கட்டத் தேர்தல்: 13.12.2021, 14.12.2021


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், கன்னியாகுமரி மேற்கு மாவட்டம், தென்காசி வடக்கு மாவட்டம், தென்காசி தெற்கு மாவட்டம், விருதுநகர் கிழக்கு மாவட்டம், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம், மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டம், அரியலூர் மாவட்டம், மதுரை மாநகர் மாவட்டம், சேலம் புறநகர் மாவட்டம், சேலம் மாநகர் மாவட்டம் ஆகிய 15 மாவட்டங்களில் உள்ள, ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள்; பேரூராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள், நகரங்களுக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளுக்கு உட்பட்ட வட்டக் கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான முதல் கட்டத் தேர்தல்களை வருகின்ற 13.12.2021 - திங்கட் கிழமை, 14.12.2021 செவ்வாய்க் கிழமை ஆகிய தேதிகளில் நடத்துவதற்கு மட்டும், மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய, பேரூராட்சி, நகரம் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளுக்கான தேர்தல் ஆணையாளர்கள் பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது.


மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்கள், கழக அமைப்புத் தேர்தல்களை நடத்துவதற்கான வாக்காளர் பட்டியல் (கழக உறுப்பினர்கள்), மினிட் புத்தகம், விண்ணப்பப் படிவம், ரசீது புத்தகம், வெற்றிப் படிவம் முதலானவற்றை, சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்களிடமிருந்து பெற்று, அவற்றை ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கான தேர்தல் ஆணையாளர்களிடம் வழங்கி, கழக சட்ட திட்ட விதிமுறைகளின்படி, கழக அமைப்புத் தேர்தல்களை முறையாக நடத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். கழக அமைப்புத் தேர்தல்கள் சுமூகமாக நடைபெறும் வகையில், மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் ஆணையாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.


இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர். 


இதோ மாவட்டவாரியாக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலர்கள் தொடர்பான 70 பக்க அறிவிப்பு விபரம்: 



ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


 


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


 


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


 


 


யூடிபில் வீடியோக்களை காண