ஓபிஎஸ் தொடர்ந்து தவறு செய்து வருகிறார்:


இபிஎஸ் தலைமையேற்க அதிமுக-வினர் வலியுறுத்துவதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் தொடர்ந்து தவறு செய்து வருகிறார் என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


செய்தியாளர்கள் சந்திப்பு:


அதிமுக பொதுக்குழு நாளை நடைபெறவுள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக-வில் உள்ள அனைத்து பிரிவுகளும் ஒற்றைத் தலைமை தேவை என்று கூறுவதாகவும், அதற்கு இபிஎஸ் தலைமை ஏற்க வேண்டும் என தெரிவிப்பதாகவும் கூறினார். மேலும் அதிமுக-வின் அனைத்து பிரிவு நிர்வாகிகளும் இபிஸ் ஒற்றை தலைமை ஏற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி, அதை இபிஎஸ்-இடம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்,


கேள்வி: அதிமுகவில் அராஜக போக்கு, தர்மம் வெல்லும் என் ஓபிஎஸ் ட்வீட் போட்டிருக்காரே:


பதில்: அதிமுக ஜனநாயகம் மலர்ந்த இயக்கம், எந்த அராஜக போக்கும் கிடையாது. ஓபிஎஸ் தவறான பாதை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். பொதுக்குழுவில் கலந்து கொண்டு, ஓபிஎஸ் உள்ளிட்ட அனைவரும் பொதுக்குழுவின் முடிவுக்கு கட்டுப்பட்டாக வேண்டும். ஊரோடு ஒத்து வாழ வேண்டும்.


கேள்வி: ஓபிஎஸ் இல்லாமல் நடைபெறுமா:


பதில்: பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும்


கேள்வி: ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தீ குளிக்கிறார்களே?.


பதில்: எனக்கு தெரியாது..


Also Read: OPS Tweet : தொடங்குகிறதா தர்மயுத்தம் 2.0? முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் செல்கிறாரா ஓ.பி.எஸ்?







மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண