விழுப்புரம் : தமிழ்நாட்டில் நேர்மையாக தேர்தல் நடந்தால் அதிமுக கூட்டணி தான் வெற்றி பெறும், திமுக ஆட்சியில் தலித் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என புரட்சிப்பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி குற்றச்சாட்டு
 

திமுக ஆட்சியில் தலித் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை!

விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சியினரின் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துக் கொண்ட புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை.ஜெகன்மூர்த்தி நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது.,
 
பீகார் தேர்தல் வெற்றி, 2026-ல் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள தேர்தலில் தொடரும். அதிமுக தலைமையில் உள்ள கூட்டணி பீகாரை போல் இங்கும் வெற்றி கிடைக்கும். எஸ்.ஐ.ஆர் மூலம் இதற்கு வாய்ப்பு உள்ளது. நாங்களும் இதனை எதிர்ப்பார்க்கிறோம். விஜய் எஸ்.ஐ.ஆர் எதிர்க்க என்ன காரணம். வாக்களிக்க தகுதி உள்ளவர்களுக்கு வாக்கு இருக்க வேண்டும். மாநில அரசு ஊழியர்கள், சமூக சேவகர்கள் இனைந்து தான் எஸ்.ஐ.ஆர் பணியில் ஈடுபட்டுள்ளனர் எனவே தவறு நடக்க வாய்ப்பில்லை. ஒவ்வொரு கிராமத்திலும் கிராம் நிர்வாக அதிகாரிகள் உதவியுடன் நான் பணிகள் நடைபெறுகிறது எனவே ஒரு மாத கால அவகாசம் போதுமானது. 

தலித் மக்களை ஒன்று சேர விடாமல் திராவிட கட்சிகள் நடத்துகிற நாடகம் தான் இது!

இதில் தவறு செய்பவர்கள் பயப்படலாம். நியாயமாக உள்ளவர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. வடநாட்டில் இஸ்லாமியர்கள், தலித்துகள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். பாஜக தலித்துகளுக்கும், இஸ்லாமியர்களும் எதிரான கட்சி என எதை வைத்து கூற முடியும். இஸ்லாமியர்களுக்கும், தலித்துகளுக்கும் தமிழ்நாட்டிலும், வட நாட்டிலும் எங்கும் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. தலித் மக்களை ஒன்று சேர விடாமல் திராவிட கட்சிகள் நடத்துகிற நாடகம் தான் இது. தேர்தல் நியாயமாக நடந்தால் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும், ஆட்சி அமைக்கும். 

பட்டியல் சமூக மக்களே ஒழிக்க முடிவு

பட்டியலின மக்களுக்கு திமுக எதுவும் செய்யவில்லை. பட்டியல் சமூக மக்கள் மீது வழக்கு பதியப்படுகிறது. பட்டியல் சமூகத் தலைவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகிறார்கள். இந்த ஆட்சியில் பட்டியல் சமூக மக்கள் கஷ்டத்தில் உள்ளனர். பட்டியல் சமூக மக்களே ஒழிக்க முடிவு செய்துள்ளனர். எனவே ஒட்டுமொத்த பட்டியல் சமூக மக்களும் திமுகவுக்கு எதிர்ப்பாகத்தான் இருப்பார்கள்.