பாஜகவில் இருந்து விலகிய மதுரையைச் சேர்ந்த டாக்டர் சரவணன் அதிமுகவில் இணைந்துள்ளார் . சென்னையில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்துக் கொண்டார் சரவணன். திமுகவில் இருந்தபோது எல்எல்ஏவாக இருந்த சரவணன், பின்னர் பாஜகவில் சேர்ந்து தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார்.
உறுதுணையாக இருப்பேன்
அண்மையில் பாஜகவை இருந்து விலகிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சரவணன் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்
2021-ஆம் ஆண்டில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த மருத்துவர் சரவணன் அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு அளிக்காத காரணத்தினால் அதிருப்தி அடைந்து பாஜகவில் இணைந்தார். சுமார் ஒரு வருட காலத்திற்கு பாஜகவில் அவர் பயணத்த நிலையில், பாஜக மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கட்சியிலிருந்து வெளியேறுவதாக அண்மையில் அறிவித்திருந்தார்.
மீண்டும் திமுகவிலேயே மருத்துவர் சரவணன் இணைய போவதாக தகவல் வெளியான நிலையில் இன்று காலை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அதிமுகவின் வளர்ச்சிக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் பயணத்திற்கு உறுதுணையாகவும் தொடர்ந்து பயணிப்பேன் என மருத்துவர் சரவணன் வீடியோ வெளியிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், " நான் பாஜகவில் இருந்து விலகிய அனைவருக்கு தெரிந்த ஒன்று. செருப்பு வீச்சு சம்பவத்துக்கு பிறகு கட்சியில் இருந்து நான் விலகுனேன். நான்கு மாதங்களாக அரசியல் பயணம் குறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகின. நான் தனிக் கட்சி தொடங்கப் போகிறேன் என்று பரவலாக பேச்சு வந்தது. பொதுவாக ஒரு கட்சி அமைந்து நான்கு ஆண்டுகள் கழித்துதான் அதிருப்தி ஏற்படும். ஆனால் திமுக ஆட்சி வந்த ஒன்றரை வருடத்திலே மக்களை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளனர். எடப்பாடி பழனிசாமி குறித்து நல்லது விஷயம் மக்கள் தற்போது பேசி வருகின்றனர்” என்றார்.
அதிமுகவில் இணைந்த காரணம் என்னவென்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது, " மக்கள் சேவை செய்ய அதிகமுகவில் இணைந்துள்ளேன். எடப்பாடி பழனிசாமி சாமானிய மனிதராக இருக்கிறார். அதனால் ஈர்க்கப்பட்டு அதிமுகவில் தற்போது இணைந்துள்ளேன்" என்று டாக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.