இபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு மனு:


அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் கட்டுப்படுத்தக் கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. அதிமுக பொதுக்குழு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். அதில் ஜனநாயக முறைப்படி, கட்சி உறுப்பினர்களின் விருப்பத்தின் அடிப்படையில் எடுக்கும் முடிவுகளில் நீதிமன்றம்  கட்டுப்படுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். 


கேவியட் மனு:


இந்நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில்  சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கில், தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். 


அடுத்த பொதுக்குழு:


அதிமுக பொதுக்குழு ஜீன் 23 ம் தேதி நடைபெற்றது. அன்று நடைபெற்ற பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர மற்ற தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் ஒற்றை தலைமை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதை எதிர்த்து இபிஎஸ் தரப்பு உச்சநீதிம்ன்றத்தில் தொடர்ந்த வழக்கில், பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் ஜூன் 23ஆம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, ஜூலை 4 ஆம் தேதி இரு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வர இருக்கிறது. 


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண