"டாக்டர் எங்கனு கேட்டா கம்பி கட்டுவாங்க" திமுக-வை விளாசிய கஸ்தூரி!
மருத்துவமனையில் டாக்டர் எங்கே என்று கேட்டால் மோடி நிதி தரவில்லை என்று கம்பி கட்டத் தொடங்கிவிடுவார்கள் என்று கஸ்தூரி தி.மு.க. அரசை விமர்சித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் கஞ்சா கருப்பு. இவர் சென்னையில் உள்ள போரூர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் போரூரில் உள்ள சின்னப்போரூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அப்போது, அங்கு மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லை.
கஞ்சா கருப்பு விவகாரம்:
நீண்ட நேரமாகியும் எந்த மருத்துவரும் சிகிச்சைக்கு வராத நிலையில் கஞ்சா கருப்பு அதிருப்தி அடைந்தார். இதையடுத்து, அங்கிருந்த மருத்துவமனைை ஊழியர்களிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த விவகாரம் நேற்று விஸ்வரூபம் எடுத்தது.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, தனக்கு வந்தாத்தான் தெரியும் காய்ச்சலும் நோவும் என்பார்கள். திமுகவுக்கு வோட்டு போட்டவங்களுக்கு ரொம்ப வருத்தம். ஆனா தண்டனை மொத்த தமிழ்நாட்டுக்கும்தானே என்று நேற்று பதிவிட்டிருந்தார்.
கம்பி கட்டுவாங்க:
இந்த நிலையில், இன்று பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் பகிர்ந்த கஞ்சா கருப்பு மருத்துவமனை வீடியோவை டேக் செய்து, அடிப்படை மருத்துவம் கூட இல்லாமக்கள் வாடுவது தினசரி காட்சி. என்ன பண்ண! ரேசுக்கு குடுக்குற முக்கியத்துவம் மாசுக்கு இல்லையே! டாக்டர் எங்கன்னு கேட்டா மோடி நிதி கொடுக்கல, ஒன்றியம், பார்ப்பனியம்னு கம்பி கட்டத் தொடங்கிடுவாங்க
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
நடிகை கஸ்தூரி சமீபகாலமாக தீவிரமாக தி.மு.க.வை எதிர்த்து வருகிறார். தெலுங்கு மக்கள் குறித்து அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிறைக்குச் சென்று திரும்பிய பிறகு அவர் தீவிரமாக தி.மு.க.வை எதிர்த்து வருகிறார்.
அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக அரசின் செயல்பாடுகளைத் தொடர்ந்து இதுபோன்று பிரபலங்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கஸ்தூரிவின் செயல்பாடுகள் சமீபகாலமாக பா.ஜ.க.விற்கு ஆதரவாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.