சேலத்தில் அதிமுக ஓபிஎஸ் அணியை சேர்ந்த பெங்களூர் புகழேந்தி தனியார் ஹாலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கொடுத்துவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி சத்தம் எழுப்பி வருகிறார். எந்த வெப்சைட்டில் உள்ளது என்று எடுத்துக் கொடுங்கள் என்று கேள்வி எழுப்பினர். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை யார் தூக்கி கொடுத்துள்ளனர். ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி சின்னத்தை கொடுத்ததாக எடப்பாடி பழனிசாமி ஊரெல்லாம் கூறி வருகிறார். நானும் ரவுடி நானும் ரவுடி என்று ஜெயக்குமார் போன்று கூறி வருகிறார். கொரோனா காலகட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி வைத்து மதுபான விற்பனையை நிறுத்தாமல் காவல்துறை பாதுகாப்புடன் டோக்கன் கொடுத்து மதுபானம் விற்றது எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தான், அப்படி இருக்கும்போது மதுபானம் குறித்து எடப்பாடி பழனிசாமி எவ்வாறு பேசலாம் என்று கேள்வி எழுப்பினர். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆக இருந்தபோது மதுபான விலை ஏற்றப்பட்டது. இரண்டு முறை விலையை ஏற்றி, கொரோனாவில் மதுபானம் விற்பனை செய்து நிறையபேர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்தது என எடப்பாடி பழனிசாமி தற்போது விஷசாராயம் குடித்தது குறித்து பேசுவது ஏற்புடையதல்ல. மதுபானங்களின் விலை ஏற்றியதால் குறைந்த விலையில் இருப்பதாக சாராயம் வாங்கி குடித்து இறந்துள்ளனர். மதுபான கடையில் முழுமையாக மூட வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கையாக இருந்தது. எடப்பாடி பழனிசாமி என்பவர் ஊழல்வாதி, குற்றவாளி அவர் திமுக மீது குற்றம் செல்லும் அளவிற்கு சென்று கொண்டுள்ளது. அதிமுக ஆட்சிகாலத்தில் இருந்த விலையில் தான் திமுக ஆட்சியிலும் மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திராவிட ஆட்சி குறித்து பாஜக காரர்கள் குற்றம் சொல்லி வருகிறார்கள். கள்ளசாராயம் பரவாமல் இருக்க முழு முயற்சியில் தமிழக அரசு இறங்க வேண்டும் என்றும் மதுபானம் அதிகவிலை கொடுத்து வாங்கமுடியாது என்பதால் கள்ளசாராயம் குடித்து இருக்கிறார்கள் இதுதான் சுதந்திர நாடாக உள்ளது வேதனை அளிக்கிறது.
தமிழகத்தில் கலெக்ஷன் மன்னன் யார் என்றால் செந்தில் பாலாஜி தான் திமுக மூத்த அமைச்சர்கள் செந்தில் பாலாஜியின் மீது கோபத்தில் உள்ளனர் என்றும் விமர்சனம் செய்தார். மேலும் மதுபான கடைகளை படிப்படியாக மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று தான் பேசிக்கொண்டு நம்பிக்கையில் உள்ளதாக கூறினார். தமிழகத்தில் சாராயம் ஆறாக ஓடுவதற்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமியும் தங்கமணியும் தான் காரணம். மதுபானத்தில் எவ்வளவு வருமானம் சம்பாதித்துள்ளார்கள், ஒவ்வொரு மதுபானபாட்டிலும் எவ்வளவு கமிஷன் என்பது குறித்து எனக்கு தெரியும். மதுபானத்தை வைத்து கொள்ளையடித்து சம்பாதித்துவிட்டு நல்லவர்போல் எடப்பாடி பழனிச்சாமி நடிப்பது வேண்டாம் அனைத்து பணமும் எடப்பாடி பழனிச்சாமியிடம் தான் உள்ளது விமர்சனம் செய்தார். ஓபிஎஸ் சபரீசனை சந்தித்தது குறித்து கேள்விக்கு, சபரீசன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் காலில் அதிமுக முன்னாள் அமைச்சர் எத்தனை பேர் காலில் விழுந்து உள்ளீர்கள் என்று ஆதாரத்துடன் சொல்லட்டுமா என்று கேள்வி எழுப்பினர். ஊழலில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்கு யாருக்கும் தெரியாமல் அமைச்சரிடம் சென்று கொண்டிருப்பது அனைவருக்கும் தெரியும். சபரீசனை போல் கனிமொழியை பார்த்து பேசுவோம் இதில் என்ன தவறு உள்ளது. கொலைகாரன் திருடன் உள்ளிட்டவர்களை தான் பார்க்க கூடாது. டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினருடன் சேர்ந்து மதுபானம் அருந்தலாமா போட்டோக்கள் வெளியிட வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார்.
எல்லாம் ஊழல் குற்றவாளிகளையும் ஒன்றாக வைத்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமி சத்தம் போட்டு பேசி ஏமாற்றி வருகிறார். திருச்சியில் ஓபிஎஸ் கூட்டத்தை பார்த்துவிட்டு பேசுவது தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி உளறி வருகிறார். மேலும் திமுக அரசு எடப்பாடி பழனிசாமி கைது செய்யும் வரை இவ்வாறு தான் சென்று கொண்டிருக்கும், ஏற்கனவே தப்பிவிட்டார், கொடநாடு போன்ற வழக்கில் உள்ளே சென்றால் புத்திவரும். திமுக அரசு எடப்பாடி பழனிச்சாமியை கைது செய்யாமல் உள்ளது ஏன் என்று புரியவில்லை கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் பாஜகவிற்கு 20 சீட்டுகள் வேண்டும் என்று கேட்கிறார்கள். 20 சீட்டிற்கு நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆட்கள் உள்ளன என்று அண்ணாமலை இடம் கேள்வி எழுப்பினர். தன்னிலையை தான் அறிந்து பேச வேண்டும் கூறினார். வருங்காலத்தில் கூட்டணி அமைந்தால் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் தான் அமையும் ஓபிஎஸ்ஐ மட்டும் தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். சேலத்தில் ஓபிஎஸ் தலைமையில் விரைவில் மாநாடு நடைபெற உள்ளது. இதில் இடம் தேதி உள்ளிட்டவர்களை ஓபிஎஸ் விரைவில் அறிவிக்க உள்ளார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து பிரிந்து இருக்கின்ற அனைவரிடமும் தேர்தலுக்காக ஆதரவு கேட்போம். அந்த விதத்தில் சசிகலாவையும் சந்திப்போம். விசுவாசமான ஓபிஎஸ் இடமிருந்து எடப்பாடி பழனிச்சாமி இடம் கொடுத்து தவறு செய்து விட்டேன் என்று சசிகலா வருந்தியதாக கூறினார்.