கரூரில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு அதன் நிர்வாகிகள் 72 கிலோ கேக் வெட்டி கொண்டாடினர்.
ஜனவரி 14-ஆம் தேதி முன்னாள் முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் அவரின் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கரூரில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 72 ஆவது பிறந்தநாள் காணும் ஓபிஎஸ் நீண்ட ஆயுள் காலம் வாழ வேண்டும் என சின்ன ஆண்டாங் கோவில் அருகே உள்ள அங்காளம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடத்திய பின்னர் சுவாமி தரிசனம் செய்தனர்.
அதை தொடர்ந்து கூடியிருந்த அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், தக்காளி சாதம் உள்ளிட்ட உணவுகளை வழங்கி சிறப்பித்தனர். அதை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 72 கிலோ கேக்கை வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து அனைவருக்கும் புத்தாண்டுக்கான நாள்காட்டியை வழங்கினர். பின்னர் அனைவரும் ஓபிஎஸ் வாழ்க, வருங்கால முதல்வர் வாழ்க என கோசங்கள் எழுப்பியவாறு ஓபிஎஸ் பிறந்தநாள் விழாவை சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியை கரூர் மாநகர செயலாளர் ஆயில் ரமேஷ் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தார்.இதில் மாவட்ட, மாநகர, மகளிர் அணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.