தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த மார்ச் 12ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் துவங்கியது. மார்ச் 19ல் மனுத்தாக்கல் நிறைவடைந்த நிலையில் 6 ஆயிரத்து 183 ஆண்கள், ஆயிரத்து 69 பெண்கள் , மூன்றாம் பாலினத்தவர் 3 பேர் உள்ளிட்ட 7 ஆயிரத்து 255 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனு நிறைவு பெற்ற நிலையில் கடந்த மூன்று நாட்களாக வேட்பு மனு பரிசீலனை மற்றும் வேட்பு மனு வாபஸ் நடைமுறைகள் நடைபெற்றது. 




 உரிய முறையில் பூர்த்தி செய்யாதது, உரிய ஆதாரம் அளிக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2 ஆயிரத்து 743 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.எஞ்சியுள்ள 4 ஆயிரத்து 512 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில் நேற்று நடைபெற்ற வேட்பு மனுக்களை திரும்ப பெறும் பரிசீலனைக்கு பின் இறுதியாக 4 ஆயிரத்து 175 வேட்பாளர்கள் களம் காண்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 




அதே போல் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் 23 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்த நிலையில் 13 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பிரசாரம் நிறைவடைய இன்னும் 13 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் அனைத்து வேட்பாளர்களும் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.