மேற்கு வங்க முதல்வர் மம்தாவிற்கு இன்று மாலை 8 மணிமுதல் நாளை மாலை 8 மணிவரை தேர்தல் பரப்புரையில் ஈடுபட தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் வாக்கெடுப்பு நடந்துவருகிறது. இதில் ஏற்கனவே 4 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில் இன்னும் 4 கட்ட வாக்கெடுப்பு நடக்கவுள்ளது.




மேற்குவங்கத்தில் மம்தா மற்றும் பிரதமர் மோதியின் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் கடந்த சில நாட்களாக நடந்துவந்தது. இந்நிலையில் முதல்வர் மம்தா தேர்தல் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி புகார் அளிக்கப்பட்டது. அந்த புகார் குறித்து தேர்தலானயத்திடம் மம்தா அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்றும். அதனால் அவருக்கு 24 மணிநேரம் பரப்புரை செய்ய தடை விதிக்கப்படுகிறது என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.