இந்தியா மதச்சார்பின்மையற்ற நாடு என்று உலக அரங்கில் பாராட்டப்பட்டு வருகிறது. ஆனாலும், இந்தியாவில் மதம் ரீதியான, பாலின ரீதியான சிக்கல்களும், பாகுபாடுகளும் சுதந்திரத்திற்கு முன்பிருந்தும், சுதந்திரத்திற்கு பின்பிருந்தும் இருந்து வருகிறது. 

18 இஸ்லாமிய பெண் எம்.பி.க்கள்:

இந்த நிலையில், அதிர்ச்சி தரும் வகையில் புள்ளி விவரம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்கள் மூலமாக இதுவரை 18 இஸ்லாமிய பெண் எம்.பி.க்கள் மட்டுமே தேர்வாகியுள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மக்களவைக்குத் தேர்வான 18 இஸ்லாமிய பெண் எம்பிக்களில் 13 பெண்கள் அரசியல் குடும்பத்தை பின்னணியாக கொண்டவர்கள். எந்தவொரு அரசியல் பின்புலமும் இல்லாமல் 5 இஸ்லாமிய பெண்கள் மட்டுமே மக்களவைக்கு சுதந்திர இந்தியாவில் தேர்வாகியுள்ளனர்.  

இதில் மிகவும் வருத்தப்பட வேண்டியது என்னவென்றால் இந்த 18  இஸ்லாமிய பெண் எம்பிக்களில் ஒருவர் கூட தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதே ஆகும். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதியதாக உருவான தெலங்கானாவில் இருந்து ஒரு இஸ்லாமிய பெண் எம்பி கூட மக்களவைக்குச் செல்லவில்லை. 

18 எம்பிக்கள் பட்டியல்:

1. மோஃபிதா அகமத் ( 1957,  காங்கிரஸ்)

2. ஜோஹ்ராபென் அக்பர்பாய் சாவ்தா ( 1962-67, காங்கிரஸ்)

3. மைமூனா சுல்தான்  ( 1957 -67, காங்கிரஸ்)

4. பேகம் அக்பர் ஜெஹன் அப்துல்லா ( தேசிய கான்ஃபரன்ஸ், 1977 -79, 84 -89)

5. ரஷீதா ஹக் ( 1977 -79, காங்கிரஸ்)

6. மொஷீனா கித்வாய் ( 1977 -89, காங்கிரஸ்)

7. அபிதா அகமது ( 1981 - 89, காங்கிரஸ்)

8. நூர் பனோ ( 1996. 1999 - 2004, காங்கிரஸ்)

9. ரூபாப் சைய்டா ( 2004 -2009, சமாஜ்வாதி)

10. மெஹபூபா முஃப்தி ( 2004 - 09, 2014 - 19, மக்கள் ஜனநாயக கட்சி)

11.  தபசும் ஹாசன் ( 2009 - 2014)

12. மெளசம் நூர் ( 2009 - 19, திரிணாமுல் காங்கிரஸ்)

13. கைசர் ஜஹான் ( 2009 - 14, பகுஜன் சமாஜ் கட்சி)

14. மம்தாஜ் சங்கமிதா ( திரிணாமுல் காங்கிரஸ், 2014 - 19)

15. சஜ்தா அகமது ( திரிணாமுல் காங்கிரஸ் 2014 - 24)

16. ராணி நாரா ( 1998 - 2004, 2009 -2014, காங்கிரஸ்)

17. நுஸ்ரத் ஜஹான் ரூஹி ( 2019 - 24, திரிணாமுல் காங்கிரஸ்)

18. இக்ரா ஹாசன் ( 2024 முதல் தற்போது வரை, சமாஜ்வாதி கட்சி)

சுதந்திர இந்தியாவில் வெறும் 18 முஸ்லீம் பெண்கள் மட்டுமே மக்களவைக்குத் தேர்வாகியிருப்பதும், கல்வி பொருளாதாரத்தில் உயர்ந்த தென்னிந்தியாவில் ஒரு இஸ்லாமிய பெண் எம்பி கூட மக்களவைக்குத் தேர்வாகாதது பெரும் அதிர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.