தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் காலை 7மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குப்பதிவு அமைதியான முறையிலும் விறுவிறுப்பாகவும் காலை முதல்  நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில், காலை 9 மணி நிலவரப்படி மாநிலம் முழுவதும் 13.8 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 20.23 சதவீதமும், குறைந்தபட்சமாக நெல்லையில் 9.98 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தது.




இந்த நிலையில், காலை 11 மணி நிலவர வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, 26.29 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இதன்படி, அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 28.33 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக திருநெல்வேலியில் 20.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.


காலை 9 மணியளவில் 10.5 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்த சென்னையில் 23.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. காலை முதல் வாக்குப்பதிவு அனைத்து தொகுதிகளிலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால், வாக்கு சதவீதம் அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.