மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்தாண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொண்ட தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்தது. முதன்முறையாக தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்று மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தற்போது ஓராண்டை நிறைவு செய்துள்ளது.


முதலமைச்சர் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை எப்படி கையாளுகிறார்..?



இந்த ஓராண்டில் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான அரசின் செயல்பாடுகள் பற்றி அரசியல் கட்சியினரிடம் ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் வைக்கும் விமர்சனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலினின் எவ்வாறு எதிர்கொண்டுள்ளார் என்பது குறித்த கேள்விக்கு ஏபிபி சி வோட்டரின் கருத்துகணிப்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளது. அவை கீழே வருமாறு:


வழக்கமான பாணியில் கையாண்டுள்ளார் :


எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழக்கமான பாணியிலே கையாண்டுள்ளார் என்று தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 36.8 சதவீதத்தினரும், அ.தி.மு.க. கூட்டணியினர் 34.9 சதவீதத்தினரும், அ.ம.மு.க.வினர் 35 சதவீதமும் கூறியுள்ளனர். மக்கள் நீதிமய்யத்தினர் 33.3 சதவீதம் பேரும், நாம் தமிழர் 42.9 சதவீதம் பேரும், மற்றவர்கள் 30 சதவீதம் பேரும் இதே கருத்தை கூறியுள்ளனர். மொத்தம் 36 சதவீதம் பேர் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழக்கமான பாணியில் கையாண்டுள்ளார் என்று கூறியுள்ளனர்.





நன்றாக கையாண்டுள்ளார்: ஆனால், இன்னும் கவனம் தேவை :


முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை நன்றாக கையாண்டுள்ளார் என்றும், இருப்பினும் இன்னும் கூடுதல் கவனம் தேவை என்று தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 47.7 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 31.2 சதவீதம் பேரும், அ.ம.மு.க.வைச் சார்ந்தவர்கள் 20 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். மக்கள் நீதிமய்யத்தை சார்ந்தவர்கள் 33.3 சதவீதமும், நாம் தமிழர் கட்சியைச் சார்ந்தவர்கள் 35.7 சதவீதம் பேரும், மற்றவர்கள் 40 சதவீதம் பேரும் என மொத்தம் 39.9 சதவீதத்தினர் இந்த கருத்தை கூறியுள்ளனர்.


நன்றாக கையாளவில்லை ; இன்னும் அனுபவம் வேண்டும்


எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக கையாளவில்லை என்று தி.மு.க. கூட்டணியினர் 9.3 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணியினர் 22 சதவீதம் பேரும், அ.ம.மு.க.வினர் 5 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். மக்கள் நீதிமய்யத்தினர் 20 சதவீதம் பேரும், நாம் தமிழர் 7.1 சதவீதம் பேரும், மற்றவர்கள் 20 சதவீதம் பேரும் இதே கருத்தை கூறியுள்ளனர். மொத்தம் 13.6 சதவீதம் பேரும் இந்த கருத்தை கூறியுள்ளனர்.


முழு கருத்துக் கணிப்பு விவரம் :



எதையும் நன்றாக எதிர்கொள்ளவில்லை :





கடந்த ஓராண்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சிகள் விமர்சனங்கள் அனைத்தையும் சிறப்பாக கையாளவில்லை என்று தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 6.2 சதவீதத்தினரும், அ.தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 11.9 சதவீதம் பேரும், அ.ம.மு.க.வைச் சார்ந்தவர்கள் 40 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். மக்கள் நீதிமய்யத்தினர் 13.3 சதவீதம் பேரும், நாம் தமிழர் 14.3 சதவீதம் பேரும், மற்றவர்கள் 10 சதவீதம் பேரும் என மொத்தம் 10.5 சதவீதம் பேரும் முதல்வர் நன்றாக கையாளவே இல்லை என்று கூறியுள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர



யூடியூபில் வீடியோக்களை காண