தமிழ் புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பிலவ தமிழ்ப்‌ புத்தாண்டு பிறந்ததையொட்டியும்‌, சித்திரைத்‌ திருநாளை முன்னிட்டும்‌ கோவில்களில்‌ அதிகாலையிலேயே பக்தர்கள்‌ திரண்டு வந்து ஸ்வாமி தரிசனம்‌ செய்தனர்‌.


தமிழ்‌ மாதங்கள்‌ பன்னிரண்டில்‌ முதலாவதாக வரும்‌ சித்திரை மாதம்‌ முதல்‌ நாள்‌ புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. ஜோதிடர்கள் கூற்றுப்படி சூரியன்‌ மேஷ ராசியில்‌ சஞ்சரிக்கத்‌ தொடங்குவது இந்த சித்திரை மாதத்தில்‌ தான்‌. புத்தாண்டில்‌ பூஜை அறையை சுத்தம்‌ செய்து மலர்களால்‌ அலங்கரித்து கனிகளை வைத்து காண்பதன்‌ மூலம்‌ வருடம்‌ முழுவதும்‌ மகிழ்ச்சிகரமாக இருக்கும்‌ என்பது நம்பிக்கையாக உள்ளது.




இந்நிலையில் பிலவ தமிழ்ப்‌ புத்தாண்டு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில்‌ பக்தர்கள்‌ நீண்ட வரிசையில்‌ நின்று சுவாமி தரிசனம்‌ செய்தனர்‌.