பதிவுத்துறை தலைவருக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ் அனுப்பியுள்ள அனுமதிக் கடிதத்தில், ”சித்திரை முதல் தேதி, ஆடிப்பெருக்கு, தைப்பூசம் போன்ற மங்களகரமான நாட்களில் பத்திரவு பதிவு செய்ய கூடுதல் கட்டணம் வசூலிக்க  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பத்திரப்பதிவுத்துறையின் வருவாயை பெருக்கும் நோக்கில் கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும், மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படவும் அரசு அனுமதி அளித்துள்ளது.