சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒப்பந்தமுறையில் ஆசிரியர் பணிக்கான நேர்முகத் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. இந்த தேர்வுக்கு பல பேர் விண்ணப்பித்துள்ளனர். ஒரு விண்ணப்பதாரரின் பெயர் மகேந்திர சிங் தோனி எனவும், அவரது தந்தையின் பெயர் சச்சின் டெண்டுல்கர் எனவும் விண்னப்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விண்ணப்பத்தை பார்த்த தேர்வாளர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.


MS Dhoni Old Tweets: ''இப்பதான் சத்தமில்ல... அப்பலாம் வேற லெவல்'' - தோனியின் ட்விட்டர் ஹிஸ்டரி ரீவைண்ட்!


மேலும், மகேந்திர சிங் தோனி என்ற பெயர் கொண்ட விண்ணப்பதாரர் பொறியியல் பட்டப்படிப்பு படித்திருப்பதாகவும், அதில் 98% மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பிடித்திருப்பதாகவும் தேர்வாளர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. எனினும், ஜூலை 2-ம் தேதி நடைபெற்ற நேர்முகத் தேர்வுக்கு மகேந்திர சிங் தோனி பங்கேற்கவில்லை.  அதனால், இந்த விண்ணப்பதாரரின் பெயரை பார்த்து சந்தேகம் அடைந்த தேர்வாளர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.




இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரைச் சேர்ந்த காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். விண்ணப்பதாரரின் பெயர் கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் பகிர்ந்தவுடன் டிரெண்டாகி வருகிறது. 






ஏற்கனவே, ஜூலை மாதம் வந்துவிட்டதால், தோனி பர்த்டே கொண்டாட்டங்களை ரசிகர்கள் தொடங்கிவிட்டார்கள். இந்த ஆண்டும் அதே வழக்கம்தான்! 7 நாட்களுக்கு முன்னரே, கவுண்டவுன் ஆரம்பித்து தோனி பர்த்டேவுக்காக வெயிட்டிங்கில் உள்ளனர் அவரது ரசிகர்கள்.


சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்று கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது. கிரிக்கெட்டிங் சீன்லையே இல்லையென்றாலும், தோனி குறித்த ஒரு இன்ஸ்டாகிராம் பதிவானாலும் சரி, மகள் ஸீவா உடனான க்யூட் வீடியோவாக இருந்தாலும் சரி, அவர் பேசவவே இல்லையென்றாலும் அவரை பற்றிய செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் என்றைக்குமே டிரெண்ட் ரகம்! 






அதே போல, ’சச்சின் மகன் தோனியின்’ விண்ணப்ப புகைப்படமும் சமூகவலைதளத்தில் டிரெண்டாகி வருகின்றது!


Natrajan met Yogi Babu: நடராஜன் - யோகி பாபு சந்திப்பு.. கவனம் பெற்ற ‘தல’ தோனி - வைரலாகும் புகைப்படம்