தமிழ்நாடு:



  • புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்க தமிழக அரசுக்கு அனுமதி - சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

  • தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலர் வெட்டிக் கொல்லப்பட்ட விவகாரம் - ரூ.1 கோடி நிதியுதவி அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்

  • அரசு பள்ளிகளில் பராமரிப்பு, பாதுகாப்பு பணியில் தமிழ் தெரிந்தவர்களை நியமிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு

  • தொழிலாளர் தினமான மே 1ம் தேதி கிராம சபை கூட்டங்களை நடத்த உத்தரவு - கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் நேரத்தை முன்கூட்டியே மக்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தல்

  • 12ம் வகுப்பு தேர்தல் முடிவுகள் வெளியாகும் தேதியை மாற்ற முடிவு - முதலமைச்சர் உடனான ஆலோசனைக்குப் பிறகு தேதி அறிவிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

  • தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்பு

  • கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா - மே 5ம் தேதி மதுரையில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

  • சென்னை விமான நிலையத்தில் உள்ள புதிய முனையம்  பயன்பாட்டிற்கு வந்தது - பயணிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு

  • கோயம்பேடு சந்தையில் ரசாயனத்தால் பழுக்க வைத்த 5 டன் மாம்பழம் பறிமுதல்


இந்தியா:



  • பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சரும், சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் (99) வயது மூப்பால் காலமானார்

  • பிரகாஷ் சிங் பாதல் மறைவுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல்

  • அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்ட விவகாரம் - குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேம்முறையீடு

  • கர்நாடகாவில் அண்ணாமலை தேர்தல் பணியாற்ற  தடை விதிக்கக் கோரி காங்கிரஸ் சார்பில்  தேர்தல் ஆணையத்தில் மனு - காவல்துறை அதிகாரிகளை  பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு

  • கர்நாடகாவில் களைகட்டும் தேர்தல் பரப்புரை - இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு இப்போதைக்கு ரத்து செய்யப்படாது என முதலமைச்சர் பசவராஜ் பொம்மை திடீர் விளக்கம்

  • ஆப்ரேஷன் காவேரி - உள்நாட்டு போர் கலவரம் வெடித்துள்ள சூடானில் இருந்து இரண்டாவது கட்டமாக 121 இந்தியர்கள் மீட்பு

  • மேற்குவங்கத்தில் மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரம்- காவலர்கள் மீது அதிருப்தி அடைந்து காவல் நிலையத்திற்கு தீ வைத்த மக்கள்

  • மலையாள நடிகர்கள்  ஷேன் நிகம்  மற்றும் ஸ்ரீநாத் பாஷி ஆகிய இருவருக்கும்  தடை விதித்து  தயாரிப்பாளர் சங்கம்  மற்றும் நடிகர் சங்கம் முடிவு - படப்பிடிப்பு தளத்தில் அநாகரீகமாக  நடந்ததாக குற்றச்சாட்டு


உலகம்:



  • 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி - ஜோ பைடன் அறிவிப்பு

  • இனி நான்கு செல்போன்கள் வரை ஒரே வாட்ஸ்-அப் எண்ணை பயன்படுத்த முடியும் - மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜுக்கர்பெர்க் அறிவிப்பு

  • இங்கிலாந்து பிரதமர்  ரிஷி சுனக்கின் கான்வாய்க்கிற்கு பின்  ஓடிச் செல்லும் காவலர்கள் -  காவல்துறையின் ஆற்றல் வீணடிக்கப்படுவதாக இணையவாசிகள் குற்றச்சாட்டு

  • உக்ரைனில் ரஷ்யப் படைகளின் தாக்குதலில் இடிந்து விழுந்த அருங்காட்சியகத்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த பெண்ணை போராடி மீட்ட மீட்புக் குழுவினர் 


விளையாட்டு:



  • ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் பெங்களூரு - கொல்கத்தா அணிகள் மோதல்

  • ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் மும்பையை அணியை வீழ்த்தி குஜராத் அணி அபார வெற்றி

  • இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அயர்லாந்து அணி 492 ரன்கள் குவிப்பு - பால் ஸ்டிர்லிங் மற்றும் கேம்பெர் சதமடித்து அசத்தல்

  • பாகிஸ்தான் உடனான கடைசி டி-20 போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரை 2-2 என சமன் செய்தது