இந்திய அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோதி இன்று அவசர ஆலோசனை.
கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
மே 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசி வழங்கும் முகாம் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது.
1 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை பெறும் கர்நாடகமாநிலம், முதற்கட்டமாக 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு.
பருவ நிலை மாற்றத்தில் இருந்து மக்களை காப்பாற்ற அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமர் மோதி.
மேற்குவங்கத்தில் அமைதியாக நடந்து முடிந்த 6ம் கட்ட வாக்கு பதிவு - 79 சதவிகித வாக்குகள் பதிவானதாக தகவல்.
இரண்டாம்கட்ட தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மேற்குவங்கத்தில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பரப்புரை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கூறி 5 மாதங்களுக்கு மேலாக தொடரும் விவசாயிகள் போராட்டம்.
கொரோனா பரவலால் ஏப்ரல் 24ம் தேதி தொடங்கி மூன்று நாட்களுக்கு அனைத்து அலுவலங்களையும் மூட உத்ரகாந்த் அரசு உத்தரவு.
இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு அமீரகத்தில் ஏப்ரல் 25ம் தேதி தொடங்கி 10 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் மாயமான நீர்முழ்கி கப்பல், தேடுதல் பணியில் 6 போர்க்கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கொரோனா பரவும் அச்சத்தால், இந்தியா செல்வோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று நடந்த ஐ.பி.எல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வென்று பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது பெங்களூரு அணி.
கொரோனா பாதித்த நிலையில் பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் ஷ்ரவன் ரத்தோட் நேற்று இரவு 9.30 மணி அளவில் காலமானார்.
நடிகர் விவேக் மறைவால் வேறு நடிகரை கொண்டு அக்டோபர் மாதத்திற்குள் படத்தை முடித்துத்தர முயற்சிக்கிறேன் - இயக்குனர் சங்கர் விளக்கம்.