சுதந்திர போராட்ட வீரர் மற்றும் இந்திய முஸ்லீம் லிக் கட்சியின் நிறுவனருமான காயிதே மில்லத் அவர்களின் 131 ஆவது பிறந்தநாள் விழா இன்று சென்னை திருவல்லிக்கேனியில் கொண்டாடப்பட்டது. தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன் , அமைச்சர் என் ஆனந்த் , ஆதவ் அர்ஜூனா ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர். காயிதே மில்லத் பிறந்தநாளில் திமுக முன்னாள் எம் பி எம் எம் அப்துல்லா இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
காதர் மொய்தீனை விலாசிய எம் எம் அப்துல்லா
எம்.எம் அப்துல்லா பேசுகையில் "தன்னுடைய மதச்சார்பற்ற தன்மையால் இந்திய மக்கள் அனைவரது மனதிலும் இடம்பெற்ற ஒரு உயர்ந்த தலைவர் காயிதே மில்லத். அவர் வழிவந்த முஸ்லீம் லீக் கட்சியின் இன்றைய தலைவராக இருக்கக் கூடிய பேராசிரியர் காதர் மொய்தீன் முன்னதாக விஜய்க்கு ஆதரவு தெரிவித்தார்கள். இன்று அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்கள் . கவர்னர் அட்சி வந்துவிடக்கூடாது , நாட்டில் நிலையான அரசு வேண்டும் என பல்வேறு காரணங்கள் சொல்கிறார்கள். அதைப்பற்றி எந்த விமர்சனமும் இல்லை. ஆனால் அவர்கள் பேசுகின்ற பேச்சு ஏதோ விஜயின் ரசிகர் மன்ற தலைவர் போல் இருப்பது இஸ்லாமியர்களை சங்கடத்திற்கு உள்ளாக்குகிறது. தமிழ்நாட்டில் மதிக்கத்தக்க தலைவராக இருந்த அவர் இன்று தன்னுடைய மாண்புகளை எல்லாம் மறந்து விஜய் ரசிகர் மன்ற தலைவர் போல் பேசுகிறார். அவருடைய அமைச்சர் இருக்கும் அறைக்கு சென்ற அவர் இது நூற்றாண்டு கனவு நிறைவேறியது என்று சொல்கிறார். நூற்றாண்டு கனவு என்று எதை சொல்கிறார் என்று தெரியவில்லை. நூற்றாண்டுகளாக இஸ்லாமியர்கள் இங்கு அதிகாரமில்லாமல் இருந்தார்களா? காமராஜரின் அமைச்சரவையில் மஜீத் அமைச்சராக இருந்தார். பேரிஞர் அண்ணாவின் அமைச்சரவையில் மரியாதைக்குரிய சாதிக் பாட்சா இருந்தார். இன்றைய கழகத் தலைவரின் அமைச்சரவையிலும் கூட ஆவடி நாசர் , மஸ்தான் அமைச்சரவையில் இருந்துள்ளார்கள். இப்படி தொடர்ச்சியாக தமிழகத்தில் இஸ்லாமியர்கள் அதிகாரித்தில் இருந்துள்ளார்கள். நூற்றாண்டு கனவு என்று காதர் மொய்தீன் எதை சொல்கிறார் என்று தெரியவில்லை. அமைச்சரவையில் சேர்ந்துவிட்டீர்கள் சேர்ந்ததற்கு ஏதாவது சொல்லிட்டு போங்க. ஆனால் நூற்றாண்டு கனவு என்று இந்த மாநிலத்தில் திராவிட இயக்கம் எதுவும் செய்யாதது போல் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை .
சென்ற தேர்தலில் மூஸ்லீம் லீக் எங்களிடம் மூன்று சீட் வாங்கினார்கள். அதில் மூன்றிலும் தோல்வியடைந்தார்கள். இந்த முறை இரண்டு சீட் வாங்கினார்கள். அவர்கள் தோற்றுவிட்டால் திமுக சரியாக வேலை செய்யவில்லை என்று பழி வந்துவிடும் என்பதற்காக பக்கத்து தொகுதியில் இருந்தவர்கள் வேலைப்பார்த்து அவர்களை வெற்றிபெற வைத்தார்கள். திமுக தொண்டர்கள் தனது சொந்த கை காசு போட்டு உங்களை ஜெயிக்க வைத்திருக்கிறார்கள். கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் திமுக தோற்றுவிடும் என்று தெரியும் என்று சொல்கிறீர்கள். நீங்கள் தோற்க போகிறீர்கள் என்று தெரிந்தும் நாங்கள் ஜெயிக்க வைக்கிறோம் . அதுதான் கூட்டணி தர்மம். தோற்று விடுவோம் என்று முன்னாடியே தெரியும் என்று சொல்வதா கூட்டணி தர்மம்?
முஸ்லீம் லீக் கட்சி முன்னதாக திமுகவுக்கே தங்களது ஆதரவு என்று தெரிவித்த நிலையில் பின் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததற்கான காரணம் என்ன ? தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டதா என்கிற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு எம் எம் அப்துல்லா " குதிரை பேரம் நடக்கவில்லை என்று அவர் சொன்னார். அடிமாட்டு விலைக்கு ஏதும் பேரம் பேசினார்களா என்று தெரியவில்லை " என்று கூறியுள்ளார்
