தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்ட நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் Chif Minister Of Tamilnadu என மு.க.ஸ்டாலின் மாற்றினார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்றுக்கொண்டார். ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில், அவருக்கு ஆளுநர் பன்வாரி லால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’.... என்று உறுதி மொழி ஏற்றார் மு.க.ஸ்டாலின். இதைப்பார்த்த அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் அடைந்தார். அவரின் பக்கத்தில் அமர்ந்திருந்த உதயநிதி ஸ்டாலினும் ஆனந்த கண்ணீருடன் தனது தந்தை பதவியேற்பதை பார்த்தார். தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதையடுத்து அவரது காரில் இருந்த திமுக கொடி எடுக்கப்பட்டு, தேசியக் கொடி பொறுத்தப்பட்டது.
இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்பு நடைபெற்று வருகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட நீர்வளத்துறை அமைச்சராக துரைமுருகன் பதவியேற்றுக் கொண்டார். இவரைத்தொடர்ந்து, நகர்ப்புற வளர்ச்சி அமைச்சராக கே.என்.நேரு பதவியேற்றுக் கொண்டார். மற்ற அமைச்சர்களும் பதவியேற்றி வருகின்றனர்.
இந்நிலையில், மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் Chif Minister Of Tamilnadu என மாற்றிக்கொண்டார். அத்துடன், திராவிட இனத்தைச் சார்ந்தவன் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். இது புகைப்படமாக வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/mkstalin?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp%5Eserp%7Ctwgr%5Eauthor
மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி அழகிரி கலந்துக்கொண்டார். அவரை பார்த்ததும் உதயநிதி ஸ்டாலின் கட்டினைத்து வரவேற்றார்.
திமுக அமைச்சரவை பதவியேற்பு விழாவில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பல கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.