மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து மின்வாரிய இயக்குதல் மற்றும் பராமரிப்பு அலுவலகங்களிலும் வருகின்ற சனிக்கிழமை சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

சிறப்பு மின்வாரிய குறைதீர் முகாம் 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மின் கட்டணத் தொகை, மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்களையும் நிவர்த்தி செய்யும் வகையில், வரும் 05.04.2025 சனிக்கிழமை அன்று காலை 11.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மின்வாரிய செயற்பொறியாளர்கள் - இயக்குதல் & பராமரிப்பு (Executive Engineer/O&M Office) அலுவலங்களிலும் ஒரு நாள் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Gold Rate 3rd April: வெளுத்து வாங்கும் தங்கத்தின் விலை.. மீண்டும் மீண்டும் புதிய உச்சம்.. இன்று எவ்வளவு தெரியுமா.?

மின் நுகர்வோர் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகோள் 

அன்றைய தினம் பெறப்படும் அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு, நுகர்வோர் மற்றும் பொதுமக்களுக்கு தீர்வு தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றும் இந்த வாய்ப்பினை மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை கோட்டம்

அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகின்ற 05.04.2025 சனிக்கிழமை அன்று காலை 11.00 முதல் மாலை 5.00 மணி வரை மயிலாடுதுறை கோட்ட அளவியான குறைதீர் சிறப்பு முகாம் உதவி செயற்பொறியாளர்/இயக்குதல் மற்றும் பராமரித்தல்' நகர் மயிலாடுதுறை டவுள் ஸ்டேஷன் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் மயிலாடுதுறை நகர் மேற்கு, நகர் கிழக்கு மயிலாடுதுறை, சோழசக்கநல்லூர், நீடுர், திருவிழந்தூர், புறநகர் மயிலாடுதுறை, கிளியனூர், சங்கரன்பந்தல், மங்கநல்லூர், மூவலூர், கோமல், குத்தாலம், கடலங்குடி, பாலையூர், மேக்கிமங்கலம் ஆகிய பிரிவு அலுவலகத்தை சார்ந்த மின் நுகர்வோர்கள் மற்றும் பொது மக்கள் இம்முகாமில் கலந்துகொண்டு தங்களது மின் கட்டணம், மின்மானி பழுது மற்றும் குறைந்த மின் அழுத்தம், மற்றும் பழுதான மின் கம்பம் தொடர்பான குறைகளை தெரிவித்து பயன் பெறலாம் என செயற்பொறியாளர் ரேணுகா, இயக்குதல் பராமரிப்பு மயிலாடுதுறை தெரிவித்துள்ளார்.

Kavya Maran: ஓசி டிக்கெட் விவகாரம்... காவ்யா மாறனுக்கு தொடர்ந்து வரும் மிரட்டல்! மைதானத்தை மாத்துமா SRH?

சீர்காழி கோட்டம்

இதேபோன்று சீர்காழி கோட்டத்திலும் எதிர் வரும் 05.04.2025 (சனிக்கிழமை) அன்று காலை 11.00 மணி முதல் மாலை 5 வரை சீர்காழி செயற்பொறியாளர் இயக்குதலும் பராமரித்தல் சீர்காழி கோட்ட அலுவலக வளாகத்தில் சீர்காழி கோட்டத்திற்குட்பட்ட சீர்காழி, கொள்ளிடம், அரசூர், பூம்புகார், காளி, மணல்மேடு, வைத்தீஸ்வரன் கோயில், ஆக்கூர், திருக்கடையூர், கிடாரங்கொண்டான், திருவெண்காடு, தரங்கம்பாடி செம்பனார்கோயில் ஆகிய பிரிவு அலுவலகத்தை சார்ந்த பகுதிகளில் உள்ள மின் உபயோகிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் நடைபெற்ற உள்ள குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு மின் கட்டணம், மீட்டர் பழுது, குறைந்த மின் அழந்தம் மற்றும் பழுதான மின் கம்பம் போன்ற மின்சார வாரியம் தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறும் வேண்டும் என சீர்காழி இயக்குதல் பராமரிப்பு செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.