வடகிழக்கு பருவமழை 

Continues below advertisement

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் துவங்கி சற்று ஓய்ந்த இருந்த நிலையில் தற்போது மீண்டும் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் மெதுவாக நகரும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வரும் 22 -ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பிருபதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று (நவம்பர் 17, 2025) வானிலை நிலவரம்

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மிகக் கனமழையும், 8 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Continues below advertisement

 

மேலும் கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை இதுவரை பெரிதாக மழை எட்டிப் பார்க்கவில்லை. ஆங்காங்கு சாரல் மழை மட்டுமே பெய்து கொண்டிருக்கிறது. 

பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை

அடுத்து வரும் நாட்களில் வட மாவட்டங்களில் அதிகப்படியான மழைக்கு வாய்ப்பிருப்பது தெரிய வருகிறது. இதனை கருத்தில் கொண்டு பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இன்றைய தினம் வடக்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழையின் தீவிரத்தை பொறுத்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

வரும் 21, 22 ஆகிய தேதிகளில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அதில், அரியலூர், சிவகங்கை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

மயிலாடுதுறை மாவட்டத்தின் மழை அளவு

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 35 செ.மீ கனமழையானது பதிவாகியுள்ளது. 

  • மயிலாடுதுறை 55.80 மில்லிமீட்டர்
  • மணல்மேடு 20 மில்லிமீட்டர்
  • சீர்காழி 64.80 மில்லிமீட்டர்
  • கொள்ளிடம் 65.20 மில்லிமீட்டர்
  • தரங்கம்பாடி 57.60 மில்லிமீட்டர்
  • செம்பனார்கோயில் 93.40 மில்லிமீட்டர்

மழையும் பதிவாகியுள்ளது.

அதிகப்படியாக 9 செ.மீ மழை செம்பனார்கோயிலிலும், குறைந்த அளவாக மயிலாடுதுறை 5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் 35 செ.மீ மழையானது பதிவாகியுள்ளது.

விவசாயிகள் கவலை 

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மயிலாடுதுறையில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக நெற்பயிர்கள் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் மழை நீரில் மூழ்கி சேதமானது. அது குறித்த கணக்கெடுப்பு பணிகள் இன்னும் முழுமையாக நடைபெறாத சூழலில், தற்போது மீண்டும் கனமழை மாவட்டத்தில் பெய்து வருவதால், நெட்டையர்கள் மழை நீரில் மூழ்கி பாழாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த மழையானது தொடர் பட்சத்தில் நிச்சயம் கடந்த முறை பாதிப்பில் இருந்து தப்பிய நெற்பயிர்கள் அனைத்தும் இம்முறை நேரில் மூழ்கி வீணாகும் என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளது. மேலும் தங்கள் பகுதிகளில் கணக்கெடுப்பு முடிந்த நிலையில் இப்போது வெளிவரும் மழையால் பாதிப்பு ஏற்பட்டால் விடுபட்ட பயிர்கள் கணக்கெடுக்கப்படுமா?  என்ற அச்சம் ஏற்பட்டதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.