கரண்ட் பிரச்சனையா...? தீர்வுக்கான நேரம் இதான்... சான்ஸ். விட்டு விடாதீங்க மக்களே...!

மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் புதன்கிழமை நடைபெற உள்ளது. 

Continues below advertisement

மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற உள்ள மின் நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோர் கலந்துக்கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என மயிலாடுதுறை இயக்குதல் மற்றும் பராமரித்தல் செயற் பொறியாளர் (பொறுப்பு) ரேணுகா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

அரசின் நடவடிக்கை 

தமிழ்நாடு அரசு மின்சார வாரிய துறையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. மக்கள் எளிதில் அரசு திட்டங்களை அடைய வேண்டும் மற்றும் அரசு சார்ந்த திட்டங்கள் மட்டும் பணிகளை அதிகாரிகள் எவ்வித இடையரும் இன்றி மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. அதன் ஒன்றாக மின்சார வாரியத் துறையில் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களையும் பிரச்சனைகளையும் எளிதில் தீர்த்துக் கொள்வதற்காக ஒவ்வொரு பகுதிகளிலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம் மக்கள் குறைதீர் கூட்டம் மாதந்தோறும் நடத்தப்பட்டுகிறது. மேலும் அந்தக் கூட்டத்தின் மூலம் மின் துறையில் ஏற்படும் இடையூறுகளை களைய வழிவகை செய்து தருகிறது.

வேலை தேடுபவர்களா நீங்கள்..? இதோ 35 ஆயிரம் பணியிடங்கள்...! முழு விபரம் உள்ளே...

நாளை மறுநாள் குறைதீர் கூட்டம் 

அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் நாளை மறுநாள் 12.03.2025 அன்று புதன்கிழமை மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகத்தில் நாகை மின் பகிர்மான வட்டத்தை சேர்ந்த மயிலாடுதுறை கோட்ட மேற்பார்வை பொறியாளர் ரவி தலைமையில் நடைபெற உள்ளது.

North Korea Warns: கடுப்பேத்தாதீங்க.. தப்பா ஒரு குண்டு போட்டாகூட போர் தான்.. வடகொரியா எச்சரிக்கை...

மனுவாக குறைகள் 

இக்கூட்டத்தில் பொதுமக்களாகிய மின் நுகர்வோர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவாக அளித்து மின்வாரியம் தொடர்பான குறைகளை சரி செய்துகொள்ளுமாறு மயிலாடுதுறை தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகம், இயக்குதல் மற்றும் பராமரித்தல் செயற் பொறியாளர் ( பொறுப்பு) ரேணுகா தெரிவித்துள்ளார். இந்த கூட்டமானது ஒவ்வொரு மாதமும் இரண்டாவது புதன் கிழமைகளில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement