Just In





ஓலையாம்புத்தூர் கிராமத்தில் ஒரேநாளில் நான்கு கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - பரவசத்தில் பக்தர்கள்....!
சீர்காழி அருகே ஓலையாம்புத்தூர் கிராமத்தில் கோலாகலமாக நடைபெற்ற நான்கு கோயில்களின் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சீர்காழி அருகே ஓலையாம்புத்தூர் கிராமத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்ற நான்கு கோயில்களின் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பிரசித்தி பெற்ற நான்கு கோயில்கள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த ஓலையாம்புதூர் கிராமத்தில் மன்மதீஸ்வரர், வீரமாகாளியம்மன், மகா முத்துமாரியம்மன், குன்னப் பெருமாள் அய்யனார் கோயில் என நூற்றாண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற நான்கு கோயில்கள் அமைந்துள்ளன. இந்த கோயில்களில் இவ்வாலயத்தில் பக்தர்கள் வேண்டுதல்கள் அனைத்து உடனே நிறைவேற்றும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதன் காரணமான ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து வழிபாடு செய்து தங்கள் வேண்டுதல்களை வைத்தும், வேண்டுதல் நிறைவேறிய நபர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவெற்ற திரளுவார்கள்.

கோயில் திருப்பணிகள்
இந்நிலையில் இந்த நான்கு கோயில்களிலும் ஆகம விதிப்படி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாகும்பாபிஷேகம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. முன்னதாக கும்பாபிஷேகம் செய்ய முடிவெடுத்த கோயில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் பக்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் பங்களிப்புடன் கோயில் திருப்பணிகளை தொடங்கினர். அதனைத் தொடர்ந்து கோயில் கட்டடங்கள் சீரமைப்பு, புதிய சிலைகள் வடித்தல், வண்ணம் தீண்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடைபெற்று வந்தது.
பூர்வாங்க பூஜைகள்
திருப்பணிகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்ட நிலையில், இன்று கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 3-ம் தேதி பூர்வாங்க பூஜைகளுடன், 7 -ம் தேதி முதல்கால யாகசாலை பூஜைகளும் தொடங்கப்பட்டது. தொடர்ந்து இன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
புனிதநீர் புறப்பாடு
அதனை அடுத்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு செய்யப்பட்ட்டது. புனிதநீர் அடங்கிய கடங்களை வேத விற்பன்னர்கள் தங்கள் தலையில் சுமந்து மேள தாள மங்கள வாத்தியங்கள் முழங்க கோயிலை சுற்றி வலம் வந்து கோயில் கோபுர கலசங்களை அடைந்தனர். முதலில் மன்மதீஸ்வரர் கோயில் விமான கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
கும்பாபிஷேக நிகழ்வு
தொடர்ந்து வீரமாகாளியம்மன், மகா முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து அய்யனார் கோயில் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு, குன்னப் பெருமாள் அய்யனார் கோயிலில் கலசத்தில் புனிதநீர் உற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நான்கு கோயில்களிலும் உள்ள மூலவர் சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பூஜைகள் மற்றும் கும்பாபிஷேகத்தை காத்திருப்பு சந்திரசேகர சிவம் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை இளைஞர் மன்றம் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர். இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம். செய்தனர்