தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஸ்டார் அகாடமி மாவட்ட பயிற்சி மையம் செயல்படுத்துதல், மையத்திற்கு பயிற்றுநர் தேர்வு செய்தல் மற்றும் வீரர், வீராங்கனைகள் தேர்வு நடைபெற உள்ளது.

ஜூடோ விளையாட்டு 

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2024-2025 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது அனைத்து மாவட்டங்களிலும் உயரிய தரத்திலான விளையாட்டு திறன் மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் - SDAT – STAR (SPORTS TALENT ADVANCEMENT & RECOGNITION ) அகாடமி அமைக்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பின் அடிப்படையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மயிலாடுதுறை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் “SDAT - ஸ்டார் அகாடமி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையம்” ஜூடோ விளையாட்டுக்கு 01.05.2025 முதல் துவங்கப்படவுள்ளது.

பயிற்சி மேற்கொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கான தேர்வு

இந்த பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொள்ள ஜூடோ விளையாட்டில் ஆர்வமுடைய 12 வயது முதல் 21 வயது வரை உள்ள 20 மாணவர்கள் மற்றும் 20 மாணவியர்கள் என மொத்தம் 40 பேர் தேர்வு செய்யப்படவுள்ளார்கள். மேலும், தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவியர்களுக்கு, ஒரு மாதத்தில் 25 நாட்கள் தொடர் பயிற்சி வழங்குவதோடு, சிற்றுண்டி, பயிற்சி உபகரணங்கள் மற்றும் விளையாட்டுச் சீருடைகள் போன்றவைகள் வழங்கப்படும்.  மேலும், இம் மையத்தில் பயிற்சி மேற்கொள்வதற்கு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான தேர்வு ( Selection Trails ) 28.04.2025 அன்று சாய் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

பயிற்சி அளிக்கும் ஜூடோ பயிற்றுநருக்கான தேர்வு

இம் மையத்தில் ஜூடோ ( Judo ) விளையாட்டு பயிற்சி வழங்கிட 50 வயதிற்குட்பட்ட பயிற்சியாளர் தேர்தெடுக்கப்படவுள்ளார். மேலும், இந்திய விளையாட்டு ஆணையம், National Insititute of Sports (NIS), Patiala - வில் M.Sc., Sports Coaching அல்லது அதே Insititute(NIS )-ல் 1 வருடம்/10 மாதங்களுக்கு குறையாது Diploma in Sports Coaching ஜூடோ விளையாட்டில் முடித்தவராக இருப்பின் அல்லது தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் அல்லது லட்சுமிபாய் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பிஸிக்கல் எஜிகேஷன்( Lakshmibai National Institute of Physical Education – LNIPEm Gwalior ), குவாலியரில் PG Diploma in Sports Coaching ஜூடோ விளையாட்டில் முடித்தவராக இருப்பின் முதல் முன்னுரிமை வழங்கப்படும் மற்றும் சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பு ( International Sports Federation ) நடத்திய License Course அல்லது பட்டியாலவில் உள்ள நேதாஜி சுபாஷ் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்போர்ட்ஸ் ( Netaji Subhas Institute of Sports – Patiala ) நடத்தும் 6 வார சான்றிதழ் படிப்பு ( Certificate Course) முடித்தவராக இருப்பின் இரண்டாவது முன்னுரிமை வழங்கப்படும்.

25 ஆயிரம் ரூபாய் ஊதியம் 

தேர்வு செய்யப்படும் பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சி கட்டணமாக தொகை 25,000 ரூபாய் (இருபத்தி ஐந்தாயிரம் மட்டும்) வழங்கப்படும். இது நிரந்தரப்பணி அல்ல முற்றிலும் தற்காலிகமானதாகும். இதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு சலுகைகளோ நிரந்தரப் பணியோ கோர இயலாது.

இதற்குரிய விண்ணப்பத்தினை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அணையம் மயிலாடுதுறை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 20.04.2025 வரை அலுவலக நேரம் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணிக்குள் பெற்றுக்கொண்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் நேரிலோ அல்லது  dsomyd@gmail.com  என்ற இ-மெயில் வாயிலாகவோ சமர்ப்பிக்கலாம். 

கடைசி தேதி

விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 20.04.2025 அன்று மாலை 5.00 மணி ஆகும். அதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்படமாட்டாது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு மயிலாடுதுறை சாய் விளையாட்டு அரங்கத்தில் 24.04.2025 மற்றும் 25.04.2025 நடைபெறும். எனவே, தகுதிவாய்ந்த ஜூடோ விளையாட்டு வீரர்/வீராங்கனைகள் பயிற்றுநர் பதவிக்கு விண்ணப்பித்து பயன் பெற வேண்டும்

12 வயது முதல் 21 வயது வரை உள்ள ஜூடோ வீரர்/வீராங்கனைகள் 28.04.2025 அன்று நடைபெறும் தேர்வில் ( Selection Trails ) பங்கு பெற்று பயன் பெற வேண்டுமாறும், மேலும் தகவல்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டு அரங்கம், மயிலாடுதுறை அலுவலகத்திலோ (அல்லது) 7401703459 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.