மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் உள்ள பேட்டரி கார் ஓட்டுநர் இல்லாததால் பயன்பாடு இன்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் வயதான பயணிகள் அவதி அடைந்து வருவதால் அதனை பயன்படிற்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


மயிலாடுதுறை ரயில் நிலையம் 


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சித்தார்காடு அருகே அமைந்துள்ளது மயிலாடுதுறை ரயில் நிலையம். இது ரயில்வே சந்திப்பாகவும் இருந்து வருகிறது. இங்கிருந்து தினம் தோறும் பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதேபோன்று நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த வழித்தடத்தில் பல ரயில்கள் வந்து செல்கிறது. இதன் காரணமாக இந்த ரயில் நிலையம் பயணிகள் நிறைந்து எப்போதும் பரபரப்பாகவே காட்சி அளிக்கும். மேலும் தற்போது மத்திய அரசு ரயிவே மேம்பாட்டு திட்டத்தில் ரயில் நிலையத்தில் புணரமைப்பு  பணிகள் நடைபெற்று வருகிறது.


Powerful Bikes: ரூ.2.5 லட்சம் பட்ஜெட்.. இந்தியாவில் கிடைக்கும் சக்தி வாய்ந்த டாப் 5 பைக்குகளின் லிஸ்ட் இதோ..!




பயன்பாடற்ற பேட்டரி கார் 


இந்நிலையில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு மூத்த குடிமக்கள், மேலும் நடந்து செல்ல முடியாத பயணிகள் பயன்பெறும் வகையில் ஓஎன்ஜிசி சார்பாக புதிய பேட்டரி கார்கள் கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறைக்கு இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால் இன்றைய தேதி வரை அந்த வண்டி இயக்கப்படாமல் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகம் ஓட்டுநர்  ஏற்பாடு செய்து வண்டி இயக்கலாம் இல்லையென்றால் ஏதாவது சேவை அமைப்புகளிடம் ஒப்படைத்து நிர்வகிக்க சொல்லலாம்  ஆனால் இது இரண்டையும் செய்யாமல் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கார்களை பயன்படுத்தாமல் நிறுத்தி வைத்து வீணாக்கி வருகின்றனர். நீண்ட நாட்கள் வண்டி இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால் பேட்டரி வீணாகி வண்டி செயல்படாமல் போய், பல லட்சம் ரூபாய் வீணாகிவிடும் என மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர்.


Chennai: 200 ல் இருந்து 250 வார்டாக மாறும் சென்னை.. எந்தெந்த ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளது? முழு விவரம்..




ரயில் பயணிகள் கோரிக்கை 


மேலும் இது தொடர்பாக கடந்த வாரம் கோட்ட மேலாளரை சந்தித்து மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கம் அந்த வண்டியை இயக்க கோரிக்கை வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி மயிலாடுதுறையில் இருந்து காரைக்குடி நேரடியாக சென்று வந்த ரயிலின் நேரத்தை மாற்றி அமைத்ததால் மயிலாடுதுறையில் இருந்து பேராவூரணி அறந்தாங்கி காரைக்குடி செல்லும் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனையும் கருத்தில் எடுத்துக் கொண்டு மீண்டும் மயிலாடுதுறையில் இருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு, காரைக்குடி நேரடியாக சென்று வர நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கையை வைத்துள்ளனர்.


Mumbai Indians: ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்த மும்பை இந்தியன்ஸ்.. அப்படி என்ன தெரியுமா..?