Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (26.09.2024) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 


மாதத்திர மின் பராமரிப்பு பணி


தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 


Villuppuram district Power Shutdown: விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மின் தடை - எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?


கோட்ட செயற் பொறியாளர் செய்தி குறிப்பு


அந்தவகையில் தமிழ்நாடு மின் வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற் பொறியாளர் செந்தில்நாதன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது; மயிலாடுதுறை துணை மின்நிலையத்தில் நாளை 26.09.2024 சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மயிலாடுதுறை துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் மயிலாடுதுறை, பெசன்ட் நகர், ஆராயத் தெரு, கூறைநாடு, பட்டமங்கல தெரு, பூக்கடை தெரு, அண்ணா வீதி, வியாபாரிகள் தெரு, ரயிலடி, தெற்கு சாலிய தெரு, கட்சேரி ரோடு, காமராஜர் சாலை, சீனிவாசபுரம், கீழபட்டமங்கலம், பேச்சாவடி, வழுவூர், எலந்தங்குடி, கப்பூர், மங்கநல்லூர், செங்குடி, நல்லத்துக்குடி, பெருஞ்சேரி, மூவலூர், சித்தர்காடு, மறையூர், வடகரை, அன்னவாசல், இளையாளூர் ஆகிய ஊர்களிலும்


MK Stalin Letter : ”சகோதரர் திருமாவளவன்” கடிதம் வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!


மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது. இந்த மின்நிறுத்தமானது கடந்த 21.09.2024 அன்று அறிவித்து, தவிர்க்க முடியாத சில காரணங்களால் தேதி மாற்றப்பட்டு நாளை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.