Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (25.10.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 

Continues below advertisement

மாதாந்திர மின் பராமரிப்பு பணி 

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

மின்நிறுத்த நேரம் 

பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 

Continues below advertisement

பொறையார் துணை மின்நிலையம்

அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மின்கோட்டத்திற்கு உட்பட்ட பொறையார் மற்றும் கிடாரங்கொண்டான் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளைய தினம் 25.10.2025 சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெரும் பகுதிகளில் நாளை காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செம்பனார்கோயில் உதவிசெயற்பொறியாளர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் 

* பொறையார்

* எருக்கட்டாஞ்சேரி

* தரங்கம்பாடி

* சந்திரபாடி

* காட்டுசேரி

*ஆயப்பாடி

*சாத்தனூர்

* சங்கரன்பந்தல்

* தில்லையாடி

* திருவிடைக்கழி

* T . மணல்மேடு

* கண்ணங்குடி

* மாத்தூர் 

* திருக்கடையூர்

* ஆனந்தமங்கலம்

* ஆணைகோயில்

* திருமெய்ஞானம்

* P.P. நல்லூர்

* மாணிக்கபங்கு

* பெருமாள்பேட்டை

* குட்டியாண்டியூர்

கிடாரங்கொண்டான் துணை மின் நிலையம் 

* கிடாரங்கொண்டான்

* செம்பனார்கோயில்

* மேலபாதி

* கருவாழகரை

* கஞ்சாநகரம்

* கீழையூர்

* கருவி

* ஆக்கூர்

* செம்பதனிருப்பு

* தலைச்சங்காடு

* மடப்புரம்

* காலகஸ்திநாதபுரம்

* முடிகண்டநல்லூர்

மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள்

மாறுதலுக்கு உட்பட்டது 

மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.