மயிலாடுதுறை: மயிலாடுதுறை கோட்டத்திற்குட்பட்ட 33/11 கி.வோ. மயிலாடுதுறை அர்பன் (நகர்) துணைமின் நிலையம் மற்றும் பெரம்பூர் ஆகிய முக்கிய துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் நாளை ஜூன் 20, 2026 (சனிக்கிழமை) அன்று இந்த இரு துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட மயிலாடுதுறை நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் புறநகர்க் கிராமங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் உதவி செயற் பொறியாளர்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.

Continues below advertisement

இது குறித்து மயிலாடுதுறை நகர்/இயக்குதல் மற்றும் பராமரித்தல் உதவி செயற் பொறியாளர் பொறிஞர். M. விஜயபாரதி மற்றும் புறநகர்/இயக்குதல் மற்றும் பராமரித்தல் உதவி செயற் பொறியாளர் பொறிஞர். G. ரமேஷ் ஆகியோர் தனித்தனியே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:

மின் நிறுத்தம் செய்யப்படும் நேர விவரம்

தேதி: 20.06.2026 (சனிக்கிழமை)

Continues below advertisement

நேரம்: காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை

மயிலாடுதுறை நகர் துணைமின் நிலைய மின்தடை பகுதிகள்

33/11 கி.வோ. மயிலாடுதுறை அர்பன் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பஜார் மின்பாதை, திருவிழந்தூர் மின்பாதை, தருமபுரம் மின்பாதை மற்றும் அரசு பொது மருத்துவமனை (GH) ஆகிய மின்பாதைகளின் கீழ் வரும் பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

முக்கிய தெருக்கள் மற்றும் சாலைகள்

* பழைய எஸ்பிஐ (SBI) தெரு, 

* மருத்துவமனை பகுதி 

* மகாதான தெரு

* பெரிய கடைத்தெரு

* பூம்புகார் ரோடு

* தராசு சாலை

* தருமபுரம் மெயின் ரோடு

* சீர்காழி ரோடு

* பஜார் கடைத்தெரு

முக்கிய அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள்

* மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்

* ஏ.வி.சி. காலேஜ் பகுதி

குடியிருப்புப் பகுதிகள்

* மன்னன்பந்தல்

* ஆனந்த தாண்டவபுரம் ரோடு 

* மாப்படுகை ரோடு 

* ஆழ்வார்குளம்

* திருவிழந்தூர் ஆகிய இடங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள்.

பெரம்பூர் துணைமின் நிலைய மின்தடை பகுதிகள்

புறநகர் கோட்டத்தைச் சேர்ந்த பெரம்பூர் துணைமின் நிலையத்தில் அன்றைய தினம் அத்தியாவசிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அங்கிருந்து மின் விநியோகம் பெறுகின்ற பின்வரும் கிராமப்புற பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கிறது.

பாதிக்கப்படும் கிராமங்கள்

* பெரம்பூர்

* கடக்கம்

* கிளியனூர்

* சேத்தூர்

* மூத்தூர்

* எடக்குடி

* பாலூர்

* கொடைவிளாகம்

* ஆத்தூர் 

ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

பொதுமக்களுக்கு மின் வாரியத்தின் முக்கிய அறிவுறுத்தல்

இந்த 8 மணி நேர மாதாந்திர மின் நிறுத்தத்தின் போது, உயர் அழுத்த மின் பாதைகளில் உள்ள பழுதடைந்த உபகரணங்களை மாற்றுதல், மின் கம்பிகளில் உராய்ந்து நிற்கும் மரக்கிளைகளை அகற்றுதல் மற்றும் மின்மாற்றிகளில் எண்ணெய் அளவைப் பரிசோதித்தல் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

நகரப் பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், வங்கிகள், மருத்துவமனைகள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள விவசாயப் பெருமக்கள் தங்களது அன்றாடப் பணிகளை இந்த அறிவிப்புக்கு ஏற்பத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான நீர் தேவைகளை முன்னரே பூர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நிர்வாகக் காரணங்களால் மாற்றம்

மின் வாரிய செய்திக்குறிப்பில், "அவ்வப்போது ஏற்படும் நிர்வாகக் காரணங்களைப் பொறுத்து மின்நிறுத்தம் செய்யப்படும் தேதி மற்றும் நேரம் தேவைப்படின் மாற்றி அமைக்கப்படும்" என்றும் குறிப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் அனைத்தும் மாலை 5.00 மணிக்குள் முடிக்கப்பட்டு உடனடியாக மின் விநியோகம் சீரமைக்கப்படும் என்பதால், பொதுமக்கள் மின் வாரிய ஊழியர்களின் இப்பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என உதவி செயற் பொறியாளர்கள் அருள் கூர்ந்து கேட்டுக்கொண்டுள்ளனர்.