Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (13.11.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
மின்நிறுத்த நேரம்
பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணி
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மின் கோட்டம் , மற்றும் சீர்காழி மின் கோட்டங்களுக்கு உட்பட்ட மணக்குடி, பெரம்பூர், வைத்தீஸ்வரன் கோயில், அரசூர் மற்றும் எடமணல் ஆகிய துணை மின் நிலையங்களில் வரும் 13.11.2025 நாளைய தினம் வியாழக்கிழமை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் மூர்த்தி மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் விஜயபாரதி, ரமேஷ் ஆகியோர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
மணக்குடி துணை மின்நிலையம்
* மொழையூர்
* ஆனந்த தாண்டவபுரம்
* உளுத்துக்குப்பை
* வேப்பங்குளம்
பெரம்பூர் துணை மின் நிலையம்
* பெரம்பூர்
* கடக்கம்
* கிளியனூர்
* சேத்தூர்
* முத்தூர்
* எடக்குடி
* பாலூர்
* கொடைவிளாகம்
* ஆத்தூர்
வைத்தீஸ்வரன் கோயில் துணை மின்நிலையம்
* சீர்காழி முழுவதும்
* புங்கனூர்
* சட்டநாதபுரம்
* மேலச்சாலை
* கதிராமங்கலம்
* ஆத்துக்குடி
* திருப்புங்கூர்
* தென்பாதி
* பனமங்கலம்
* கோவில்பத்து
* கொள்ளிடம் முக்கூட்டு
* விளந்திடசமுத்திரம்
* புளிச்சகாடு
* கற்பகம் நகர்
* புதிய பேருந்து நிலையம்
* பழைய பேருந்து நிலையம்
அரசூர் துணை மின்நிலையம்
* புத்தூர்
* எருக்கூர்
* மாதிரிவெளூர்
* வடரங்கம்
* அகணி
* குன்னம்
எடமணல் துணை மின்நிலையம்
* திட்டை
* செம்மங்குடி
ஆகிய பகுதிகள் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறுதலுக்கு உட்பட்டது
மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.