Mayiladuthurai Power Shutdown மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (05.10.2024) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 


மின்பாதை பராமரிப்பு பணிகள் 


தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 


Puducherry power shutdown: புதுச்சேரியில் இன்று மின் நிறுத்தம்... எந்தெந்த பகுதி தெரியுமா?




மின்வாரிய செய்தி குறிப்பு


அந்தவகையில் தமிழ்நாடு மின் வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற் பொறியாளர் செந்தில்நாதன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது; மயிலாடுதுறை துணை மின்நிலையத்தில் நாளை 05.10.2024 சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மயிலாடுதுறை துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் பஜார், தருமபுரம், திருவிழந்தூர், ஜிஎச் மின்பாதைகளான பழைய SBI தெரு, அரசு மருத்துவமனை, மகாதான தெரு, பெரிய கடைத்தெரு, பூம்புகார் ரோடு, தரங்கை சாலை, தருமபுரம் மெயின் ரோடு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஏ.வி.சி.காலேஜ், மன்னன்பந்தல்


Kanchipuram Power Shutdown : காஞ்சிபுரத்தில் நாளை மின்தடை... காஞ்சிபுரம் மக்களின் உஷார்.. எந்தெந்த பகுதிகள் தெரியுமா ?




மேலும் பல ஊர்கள் 


மற்றும் மணக்குடி துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும், சேமங்கலம், ஆலவேலி, நத்தம், வேப்பங்குளம், சாவடி, உளுத்துக்குப்பை, மொழையூர், ஆனதாண்டவபுரம்,மணக்குடி, கீழிருப்பு, மாப்படுகை பெரம்பூர் துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பெருஞ்சேரி மற்றும் கடக்கம் ஆகிய ஊர்களிலும் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது.


PM Kisan Yojana: பிஎம் கிசான் திட்டம் - விவசாயிகளுக்கான அடுத்த தவணை ரூ.6000 எப்போது கிடைக்கும்? விவரங்கள் இதோ..!